Tuesday 31 December 2013

Rupay - ரூபே


நமது வங்கி அட்டைகளின் பேமண்ட் கேட்வே க்கு இவ்வளவு காலம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களான விசா / மாஸ்டர் இரண்டை மட்டுமே நம்பி இருந்தோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள்,

௧.ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ஒரு சதவீதம் பேமண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு மறைமுகமாக போகும். இதன்மூலம் வருடம் பல ஆயிரம் கோடிகள் நம் பணம் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.

௨. நமது செலவழிக்கும் தகவல்கள் அனைத்தும் இந்திய வங்கிகளிடம் இல்லாமல் வெளிநாட்டுகாரர்களிடமே போய் சேரும். பெரு வணிக- அரசியல் திட்டமிடலுக்கு இந்த தகவல்கள் பேருதவியாய் இருக்கும்.

௩. இந்த பேமண்ட் கேட்வே நிறுவனங்கள் நுழைவு கட்டணம், அது இது என்று தாளித்ததால், சிறு வங்கிகள் ஏ.டி.எம். கடன் அட்டைகள் போன்ற சேவைகளை தர இயலவில்லை. பெரிய வங்கிகள் தந்தாலும் அந்த கட்டணங்கள் வாடிக்கையாளரிடம் இருந்தே மறைமுகமாக போய்கொண்டு இருந்தது.

இப்போது இவற்றிற்கு மாற்றாக பாரதத்தின் சொந்த கேட்வேயான ரூபே வந்துள்ளது. தொழில்நுட்ப முன்னோடியான பாரதம் இவ்வளவு நாள் இந்த திட்டம் செயல்படுத்தாது வைத்தது ஆச்சரியம். சீன அரசு ஏற்கனவே செயல்படுத்தி விட்டது கூடுதல் தகவல். போன வருடமே அறிமுகபடுத்தபட்ட இந்த கேட்வே தற்போதுதான் மெல்ல மெல்ல பரவி வருகிறது. பரவ விடாது முட்டுக்கட்டை போடுவதும், இவ்வளவு நாள் வராமல் செய்ததும் தவறான அரசியல்வியாதிகளாலே தான்.

ரூபே வின் நன்மைகள்,

௧. நம் பணம் ஆயிரக்கணக்கான கோடிகள் வெளியே செல்லாது. அந்நிய செலாவணி மிச்சம்.

௨. நமது தகவல்கள் பாதுகாக்கப்படும். 

௩. கட்டணங்கள் மிக குறைவு எனவே, கூட்டுறவு போன்ற சிறு வங்கிகளும் இதை பயன்படுத்தலாம். அதனால் வாடிக்கையாளர்களும், கிராம மக்களுக்கும் இதன் பயன் போய் சேரும்!

௪.வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டண சீப்பு போய் சேரும் (வங்கிகள் மனது வைத்தால்!)

எனவே, நாம் அனைவரும் குறைந்தபட்சம் உள்நாட்டு பணபரிமாற்றதிற்காவது 'ரூபே' வை பயன்படுத்துவோம்!


No comments:

Post a Comment