Thursday, 27 March 2014

பள்ளிபாளையம் மணி ஐயர்


பள்ளிபாளையம் மணி ஐயர்.. எங்க ஊர்காரர்; அன்றைய காங்கிரஸ்காரர்.. எவ்வளவோ பணிகள் கொடைகள் செய்த இவர், கடைசியில் தியாகிகள் பென்சன் தர சர்க்கார் முன்வந்தபோது "என் நாட்டுக்கு நான் செய்த கடமைக்கு எதுக்கு பணம் பென்சன் லாம்?" என்று மறுத்துவிட்டார். இன்று இவரது வாரிசு, எங்கள் ஊரில் மாவரைத்து பிழைக்கிறார். அவர் பெயரே மாவையர். மணி ஐயர் தானமாக கொடுத்த நிலத்தில் ஒரு பகுதி இருந்தாலும் அவர் இன்று கோடீஸ்வர ஐயர். காங்கிரசார் இவரை மறந்த போதும், எங்கள் ஊர் ஆர்.எஸ்.எஸ். காரர் மணி ஐயர் சேவைகளுக்கான அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார்.


ஒவ்வொரு ஊரிலும் உள்ள இவர்போன்ற போராளிகள், தியாகிகள், மக்கள் பிரதிநிதிகளால் தான் ஒரு இயக்கம் பேரியக்கமாக வலுப்பெருகிறதே ஒழிய மேலே இருக்கும் ஒரு சிலரால் என்பதெல்லாம் மீடியா ஹைப். 

பார்ப்பனீயம் என்று அரசியல் செய்தோருக்கு இவர்போன்ற எண்ணற்றோர் தங்கள் வாழ்க்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளனர். இளம் அரசியல்வாதிகளுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடம்.

(இவரது இயக்க கொள்கைகள் சரியானதா இல்லையா என்பது வேறு, ஆனால் அந்த கொள்கைகள் நாட்டுக்கு நன்மையளிக்கும் என்ற நன்ம்பிக்கையின் உந்துதலினால் தீவிர பணியில் ஈடுபட்டார் என்பதை மறக்க இயலாது.)

http://pallipalayamnemani.blogspot.in/

Friday, 7 March 2014

கிரானைட்/மார்பில் கற்கள்கிரானைட்/மார்பில் கற்கள் அணுக்கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்று ஆய்வு முடிவுகள் உறுதியாக சொல்கின்றன. உண்மையை சொல்வதிலும் ஒரு 'க்' வைத்து, சில வகைகள் மட்டும் என்று பொய்யுரைக்கிரார்கள் ஆய்வாளர்கள். இன்னும் சில வணிக மேம்பாட்டு ஆய்வு மையன்களோ அது சுத்த பொய் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். 

குதிகால் வலி, கேன்சர் நோயை வரவழைப்பதில் துவங்கி, மலைகளை கேக்காக வெட்டி இயற்கை-பருவநிலை மாறுதலுக்கு வழிவகுத்தது வரை கிரானைட் சுரங்கங்கள் நமக்கு தீமையை மட்டும் தன் செய்துள்ளன. கிடைத்த நன்மை என்ன..? "பளபளப்பு" "ஆடம்பரம்" டாம்பீகத்தை காட்ட ஒரு வஸ்து.. இதை மீறி..?? ஆடம்பரப்பேய் பிடித்தவர்கள் எல்லாம் சிறிது சிறிதாக குடும்பத்தோடு அழிவார்கள். ஆனால் கோயிலில் இந்த குப்பைகளை பதித்து வைத்ததை தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. கூடன்குளத்தை மூச்சு முட்ட எதிர்த்து கத்தியவர்கள் அவரவர் வீட்டுக்குள் கூடன்குளம் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, இயற்கைக்கு, கிரானைட் குவாரி தொழிலாளர்களுக்கு என அனைவருக்கும் வினையை விதைக்கும் கிரானைட், மார்பில் கற்களை புறக்கணிக்க வேண்டும்.

எங்கள் ஊரில் வீடு கிரகபிரவேசத்தன்று வீட்டு உரிமையாளரின் அம்மா, கால் வழுக்கி விழுந்து இறந்து போனார்.
http://www.epa.gov/rpdweb00/tenorm/granite-countertops.html


Wednesday, 5 March 2014

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவமும், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் வலதுசாரி, இடதுசாரி, முற்போக்கு, பிற்போக்கு, குறுக்குபோக்கு என்று எல்லா தரப்பினரும் நன்கு அறிந்துள்ளார்கள்/ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பிறகு என்ன, நாட்டு பசுக்கள் வதையை தடை செய்வதில் என்ன சிக்கல்..? நாட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். நாட்டு பசுக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். இது ஓவர் என்று சொல்வோர், இந்தியா போன்ற நாட்டில் கூட பசுக்களுக்கு தனி அமைச்சகம் இல்லாவிட்டால் வேறு எங்கு நிறுவுவது? பசுக்களில் இருந்து உணவு, மருந்து, உரம், ஊட்டச்சத்து என நம் நாட்டின் இறக்குமதிகளில் பெருமளவு குறைக்கும் சக்தியும், ஏற்றுமதி வாய்ப்புக்களையும் தர வல்லது. பசுக்களில் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. பிரத்யேக அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், கல்லூரிகள் அவசியம் தேவை.

Sunday, 2 March 2014

கம்யுனிஸ விளைவு

சீன மூங்கில் இசை போல சீனர்களின் பாரம்பரிய வாழ்க்கையும் தியானத்தை போல மிகவும் அமைதியானது; இயற்கையோடு ஒன்றிய ஆனந்தமானது. சீர்திருத்தம் செய்யவேண்டிய குறைகளை மிகைபடுத்தி புரட்சி செய்து, கம்யுனிஸ சித்தாந்தம் நல்லது என்று நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தனர். இன்று, மீடியா மற்றும் குடிமக்களின் வாயை ஒரு கையால் மூடி மறு கையால் தாராளமயமாக்கல் என்ற பேரில் கார்பரேட்களுக்கு கிரையம் எழுதுகிறார்கள். கம்யுனிஸ சித்தாந்தம் சீனாவில் கொன்று குவித்த மாணவர், உழவர் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. முதலாளித்துவத்தின் கோர முகம் என்று என்னவெல்லாம் சொல்லி அச்சுறுத்தினார்களோ அவற்றை இவர்கள் காலத்திலேயே இவர்கள் கையாலேயே நடத்துகிறார்கள். சீனாவிற்கு ஜால்ரா தட்டிகொண்டு தனிமனித உரிமை, கருத்து சுதந்திரம் என்று இங்கே முழங்கும் இந்திய கம்யுனிஸ்ட்கள் அங்கே நடக்கும் அடக்குமுறை குறித்து பேசார். இன்று இந்திய மீடியா சினிமாவில் கம்யுனிஸ சிந்தனைகள்தான் வியாபித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கண்முன் நடப்பதை வைத்து பார்த்தால் கம்யுனிசம் எப்போது யாரால் ஏன் வடிக்கப்பட்டது, என்பது ஆய்வு செய்யப்படவேண்டியது (இதில் ஆச்சரியமளிக்கும் உண்மைகள் புதைந்துள்ளன!).

சுபாஷ் பாலேக்கர் போன்ற பல நல்லோர் கம்யுனிசத்தை முழுமையாக உணர்ந்து, அதை புறக்கணித்தவர்கள் தான். எனக்கும்கூட ஒருகாலத்தில் கம்யுனிசத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. காரணம், எதிர்பார்ப்பு சுயநலம் தாண்டி சித்தாந்த உந்துதலால் செயல்படுவர். ஆனால் அந்த சித்தாந்தம் சரியா என்பதுதான் கேள்வி. சுருக்கமாக சொல்வதென்றால் கம்யுனிசம் இளைஞர்களின் சமூக கோபத்துக்கு தவறான வடிகால். மாயை. முதலாளித்துவம், லாபம் இருந்தால் நாச வேலையை செய்யும். கம்யுனிசம் லாபமில்லாவிட்டாலும் செய்யும் என்று எங்கோ கேட்டது நினைவுக்கு வருகிறது.


இன்று சீன மூங்கில் இசையை கேட்டால், ஊமையாகிப்போன உழவனின் மௌன கதறலாக இருக்கிறது.