Tuesday 31 December 2013

டீ காபி


போன வார குமுதம் படித்தேன். காபி மிக நல்லது என்று ஆராய்ச்சி முடிவு என்பது போல ஒரு டாக்டர் கூறியுள்ள கட்டுரையை போட்டிருந்தார்கள். 

அந்த கட்டுரையில், யார் ஆராய்ச்சி செய்தார்கள், எங்கு செய்தார்கள், எந்த நிறுவனங்கள் அந்த ஆராய்ச்சிக்கு ஸ்பான்சர் செய்தன என்ற தகவல்கள் இல்லை. 

இதுபோன்ற ஆராய்ச்சிகள் பல நிறுவனங்களின் தூண்டுதலால் பல்வேறு சூழல்கள் அடிப்படையில் நடக்கும். அந்த தகவல்களை நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்கு பயன்படுத்திக்கொள்ளும். இந்த வஸ்துக்களை விட நினைப்பவர்களும் - விட முடியாமல் இருப்பவர்களும் தங்கள் மனதை சமாதானம் செய்து கொள்ள மட்டுமே இந்த ஆராய்ச்சிகள் உதவும்.


காபி என்பது உடல் நலத்துக்கு எவ்வளவு தீங்கு என்பது அனைவரும் அறிவோம். உணர்ந்தும் உள்ளோம். உடல் நலம் மட்டும் இன்றி, டீ-காபி தோட்டங்கள் வருகையால் அழிக்கப்பட்ட காடுகளால் ஏற்பட்டிருக்கும் சுற்று சூழல் பாதிப்புகளும், பருவமழை கோளாறுகளும் அனைவரும் அறிவோம். நம்மாழ்வார் ஐயா கூட இதை பற்றி போகும் இடம் எங்கும் கூறுவார். சில சீதோஷ்ண நிலைகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே உகந்ததான இந்த பானம் வணிக நோக்கில் எல்லா பக்கமும் விஷ விதையாய் பரப்பி விட பட்டுள்ளது. அதனால் அடிமைகள் போல வாழும் கூளியாட்களும் ஏராளம். 

நம் உடல் நலத்துக்கும் இயற்கைக்கும் உகந்த, காப்பி-டீயை விடஉற்சாகம்-தெம்பு அளிக்க கூடிய மிக நல்ல பானங்கள் நம்மிடமே உள்ளது. அவற்றை கைவிட்டதும் கூட வியாபார சூழ்ச்சியே.

அப்படி இருக்க இது போன்ற தகவல்களை எழுதுவது பரப்புவதும் நல்ல சமூக பொறுப்பு உள்ள பத்திரிகைகள் செய்யலாமா..??

No comments:

Post a Comment