Tuesday, 31 December 2013

பெண்ணியம் நீயா நானா

பல நண்பர்கள் கருத்து கேட்ட உந்துதலால் ரொம்ப நாள் கழிச்சு நீயா நானா பார்த்தேன்.சுருக்கமா சொல்லனும்னா பெண்ணியவாதிகள் மேல வெறுப்பை வரும்படியா அவங்களே செய்துகிட்டாங்க.. பேக்பையர் ஆகிருச்சு.. பெண்ணியவாதிக நல்லவங்க போல காட்டுற எடிட்டிங் வேலையும்கூட பலன் தரள போல..

நாங்க சந்தோஷமா நல்லபடியாதா வாழ்றோம்னு பொண்ணுங்க சொல்றாங்க.. இல்ல இல்ல நீங்க அடிமையாத்தான் இருக்கீங்க எங்ககிட்ட வாங்க, உங்க குடும்பத்தை புதுசு புதுசா குத்தம் கண்டுபிடிச்சு உங்களுக்கு விரோதியா பாக்கறது எப்பிடி னு சொல்லிதறோம் னு அவங்க சொல்றாங்க..

ஒரு பான்சி உலகத்த காட்டி உங்களை உங்களுக்கு தெரியாம அடிமையா வச்சிருக்காங்க னு அவங்க சொன்னாலும், எனக்கென்னமோ உலகமே சூனியம்-கொடூரம் னு கற்பனை பண்ணிக்கிட்டு பெண்ணியவாதிகள் ஓரியா திரியிறாங்க னு தோணுது..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பெண்ணியம்.. நிகழ்ச்சி பார்த்தப்புறம் தான் தெரியுது உங்க சுய ரூபத்தையும் பொண்ணுங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க னு.. பெண்ணியம்னாலே சமூக விரோதியா தான் உங்களை பார்க்குறாங்க..

#யப்பா குடும்பத்த கெடுக்க எப்படிலாம் தினுசு தினுசா பேசுறாங்க...!

No comments:

Post a Comment