Tuesday 31 December 2013

மாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..?




விபசாரத்துக்கு கூட்டி கொடுப்பவர்களை (Pimp) குறிக்க ‘மாமா’ என்ற சொல்லை பயன்படுத்த துவங்கிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. மாமா-மாப்ளை, மாமன்-மைத்துனன் உறவு எவ்வளவு இனிமையானதும், முக்கியமானதும் என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை உணர்ந்துதான் நம் திருமண சீர்கள் முதற்கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மாமன் மைத்துனன்மார்களுக்கு சீர் அடங்குகள் வகுத்து வைத்தனர். சங்க இலக்கியங்கள் புராணங்கள் முதல் நாட்டுப்புற கதைப்பாடல்கள் தாலாட்டுக்கள் ஒப்பாரிகள் வரை மாமன் உறவை கொண்டாடாதவை இல்லை. உறவுகள் என்பது ஒரு சமூக சொத்து; சொத்தை பாதுகாப்பது அவரவர் விருப்பம். வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்த பாக்கியம் கிடையாது.

தமிழில் கூட்டிக்கொடுப்பவர்களை குறிக்கும் பிரத்யேக சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதே தமிழ் பேசிய பகுதிகளில் விபசாரம் என்பதே பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படாத ஒன்றாக இருந்ததன் காரணம்தான். ஏன் தேவைப்படவில்லை எனில் பருவ வயது தெரிந்து முன்னோர்கள் சீக்கிரம் திருமணம் செய்து வைத்தமை, அறம் சார்ந்த கல்வி, சாத்வீக உணவு, உணர்ச்சிகளை தூண்டா சமூக நெறிமுறைகள்-நடைமுறைகள் போன்றவை காரணங்கள்.

மாமா என்ற உறவை கொச்சைப்படுத்த வேண்டும்; குடும்ப-சமூக அமைப்புகளை இழிவாக்க வேண்டும்; சமூகம்-குடும்ப சார்ந்த அமைப்பை தகர்த்து தனிமனித கலாசாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் உதவியோடு இதுபோன்று உறவுச்சொற்களை கொச்சைப்படுத்துவதை தொடர்ந்து செய்கிறார்கள். பட்டை போடுதல் (சாராயம் குடித்தல்), நாமம் போடுதல் (ஏமாற்றுதல்), கோவிந்தா-அரோகரா (ஏமாற்றப்படுதல) அதோடு திருநீறு பட்டை, நாமம் போட்டவர்களை முட்டாள்களாக காட்டுவதும், தாய்மாமன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை நகைச்சுவை நடிகர்களை கொண்டும் சித்தரித்து வெகு காலமாக நம் மூலையில் நமக்கு தெரியாமல் பல மாய பிம்பங்களை தோற்றுவித்து வருகிறார்கள். இவற்றை செய்பவர்கள் யார் அவர்கள் பின்னணி என்ன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

ஒரு தாய்மாமனாகவும், எனது தாய் மாமாக்கள் மூலமும், எனது மச்சான் அவர்கள் மூலமும் எனக்கு இந்த உறவுகளின் அருமை பெருமை, அவசியம், ஆனந்தம் என்ன என்று அனுபவத்தில் புரிந்தது..!

No comments:

Post a Comment