Thursday, 20 February 2014

பனை

பனையும் கற்பக விருட்சமும் வேறு வேறு அல்ல. பனையை வெட்டுவதற்கும் பசுவை வெட்டுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நிலமுள்ள அனைவரும் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஐந்து பனை மரங்களாவது வைத்திருக்க வேண்டும். இதை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரம், ஆரோக்கியம், விவசாயம், இயற்கை, ஆன்மிகம், பாரம்பரியம் என அனைத்து நோக்கிலும் பனையின் தேவை அளப்பரியது. ஆனால் போதிய கவனம் பனைக்கு இன்னும் கிட்டவில்லை. 

முழுமையாக பனையை மட்டுமே வளர்த்தாலும் ஒரு ஏக்கருக்கு ஐந்து லட்சம் வரை மிக நீண்ட காலம் பலன் தரும் மரம் பனையாகும்..! இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. வருங்காலத்தில் பனைக்கு பெரிய எதிர்காலம் உள்ளது.

Monday, 17 February 2014

நம் நாட்டின் பாரம்பரியம் சொல்வது, "பூமியில் உள்ள கோடிக்கணக்கான உயிர்களை போல மனிதனும் ஒரு உயிரினம். இயற்கையோடு இணைந்து சேதப்படுத்தாமல் அனைத்து உயிர்களையும் வாழ விட்டு வாழ வேண்டும். இதையே சனாதனம் (Sustainability) என்பார்கள். சனாதனம் உள்ளூரிலேயே ஒரு சமூகம் இணக்கமாக வாழ கற்றுக்கொடுத்தது. சனாதனம் பாரத வர்ஷத்தின் கோட்பாடு. இதுவே, இயற்கையை சீரழிக்காமல், பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பொருளாதார-கலாசார-அறிவுலக-சமூக முன்னோடிகளாக வாழ காரணம்.

நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டவரின் தத்துவம் சொல்வது, "மனிதன் சுகிக்கத்தான் உலகை படைத்தத்தான் ஆண்டவன். அனைத்தும் மனிதனின் இன்பத்திற்காகத்தான்" என்பது. அதோடு சமூகம் குடும்பம் என்பதையும் தாழ்ந்து, தனிமனிதத்துவத்தை முன்னிறுத்துவது. அதீதமாக இயற்கையை சுரண்டி வாழ்ந்ததன் காரணமாக வெளிநாட்டவரின் வாழ்க்கை முறை கொஞ்சம் தடபுடலாக இருந்தது. பாரம்பரியத்தின் அறிவு வழியை அடித்ததன் காரணமாக வெளிநாட்டவரின் ஆடம்பர மாயத்தோற்றத்தில் மயங்கி நிற்கிறோம். வெளிநாட்டு தத்துவ தாக்கம்தான் நம் அரசியலமைப்பு சட்டத்திலேயே தனிமனிதத்துவம் மேலோங்கி நிற்க காரணம். இன்றைய இயற்கை-சமூக சீரழிவுகளுக்கு வெளிநாட்டு மத-சித்தாந்த தாக்கங்களே மூல காரணம்.

நாட்டு பசு ரகங்கள்-வெள்ளையர் சூழ்ச்சி

ஆலிவர் என்ற வெள்ளையர் தென்னிந்திய கால்நடைகள் பற்றிய புத்தகத்திற்கு எழுதப்பட்ட முகவுரை, எவ்வாறு தனித்துவமான பசு வகைகள் தவிர்க்கப்பட்டு பொதுமைப்படுத்தப்பட்டன என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. இப்புத்தகம் கோவை ஈரோடு சேலம் கரூர் பகுதிகளுக்கு உட்பட்ட நாட்டு பசுக்களை காங்கயம் என்ற ஒற்றை வகைக்குள் பொதுமைப்படுத்தி அடைத்துவிட்டது. 

இதே வெள்ளை சர்க்காரில் பணியாற்றிய கால்நடை அதிகாரி ஜான் சார்ட் 1886 வருடம் எழுதிய இந்திய கால்நடைகள் புத்தகத்தில் சேலம், திருச்செங்கோடு, வட கோவை , தென்கோவை (காங்கேயம்), கோவை மலை மாடுகள், என்று பல வகைகளை குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. 

இந்த தனித்துவங்களை பொதுமைப்படுத்தவேண்டியதன் அவசியம் என்ன என்பது புரியவில்லை. ஆயினும் இவ்வாறான தனித்துவமான பசுக்கள் என்பது மக்களுக்கு பெரிதும் பயனளிப்பது. அந்நாளைய நாடு பிரிவுகள் மண்வளம், இயற்கை அமைப்பு, மலைகள், நீர்வளம், சீதோஷ்ண நிலை போன்றவற்றை பொறுத்திருந்தது. (உதாரணம்:கோவையின் சீதோஷ்ணம் சேலத்தில் இல்லை). அன்றைய நாட்டின் பிரிவுகளும் இதை சார்ந்தே இருந்தது.

இவ்வாறான நாடுகளில் அந்தந்த நாட்டின் பட்டக்காரர்களே அந்நாட்டின் பசுக்களுக்கும், பெண்களுக்கும் காவலர் ஆவார். பசுக்களை வேறு நாட்டவன் கைப்பற்றுதல் அவமானமாக கருதப்பட்டது. இதையே 'ஆநிரை கவர்தல்; ஆநிரை மீட்டல்' என்று குறிப்பிட்டனர். பெண்களுக்கும் பட்டக்காரரே காவலர் என்பதால் தான் திருமண நிகழ்வில் நாட்டுக்குள் சீர் என்று நாட்டாருக்கு மரியாதை செய்யப்படுகிறது. எவரேனும் பசுக்களை மீட்டு வந்தால் அவர்களுக்கு நில மானியம் விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

இவ்வாறாக வேறு பகுதிகளுக்கு பசுக்கள் சென்று வர்க்கம் கலந்திடாமல் ஒரு பகுதிக்கென தனித்துவமான பசுக்களை பேணி வளர்த்தனர் நம் முன்னோர். வெள்ளையர் வருகையின் காரணமாக முன்னோர் கொடுத்த மரபுச்செல்வங்களான பல்வேறு பசு வகைகளை நாம் மறந்தோம். இன்று ஒவ்வொரு பகுதிக்கான பசுக்களை கணக்கெடுத்து அதை மீட்டு வருவது விவசாயத்திற்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கும் இயற்கைக்கும் இன்றியமையாத பணியாகும்.

(இந்த வர்க்கம் பேணுதல் ஒவ்வொரு நாடு என்பதை தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்று இருந்தது!. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு பசு என்று ஒரு வர்க்கத்தை காலம் காலமாக தலைமுறைகள் கடந்து பேணி வருவர். கல்யாண சீர்களில் பசு நிச்சயம் இருக்கும் (காண்க: மங்கள வாழ்த்து). ஒரு குடும்பத்துக்கு கல்யாணம் முடித்து புதிதாக ஒரு பெண் வரும்போது அந்த பெண்ணின் வர்க்க பசுவும் மணமகன் வீட்டு பசுக்கூட்டதில் இணைந்துவிடும். அது போடும் கன்று, அக்குடும்பத்தின் புதிய தலைமுறைக்கென உற்பத்தியாகும் தனித்துவமான பசுவாக இருக்கும்!. இதுபோன்ற வர்க்க பசுக்கள் நாம் ஆயிரம் கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்காது. அதை நாம் நமக்கென தலைமுறை தலைமுறையாக வளர்த்தால் மட்டுமே கிடைக்கும். இதனால் தான் சொல்கிறோம், பசுக்கள் என்பது வெறும் விலங்கு அல்ல; நம் குடும்பத்தின் மூத்த உறவு, வீட்டின் பெரிய மனுஷி என்று..!)

Tuesday, 11 February 2014

சித்தாந்த வேறுபாடு

நம் நாட்டின் பாரம்பரியம் சொல்வது, "பூமியில் உள்ள கோடிக்கணக்கான உயிர்களை போல மனிதனும் ஒரு உயிரினம். இயற்கையோடு இணைந்து சேதப்படுத்தாமல் அனைத்து உயிர்களையும் வாழ விட்டு வாழ வேண்டும். இதையே சனாதனம் (Sustainability) என்பார்கள். சனாதனம் உள்ளூரிலேயே ஒரு சமூகம் இணக்கமாக வாழ கற்றுக்கொடுத்தது. சனாதனம் பாரத வர்ஷத்தின் கோட்பாடு. இதுவே, இயற்கையை சீரழிக்காமல், பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பொருளாதார-கலாசார-அறிவுலக-சமூக முன்னோடிகளாக வாழ காரணம்.

நம் நாட்டுக்கு வந்த வெளிநாட்டவரின் தத்துவம் சொல்வது, "மனிதன் சுகிக்கத்தான் உலகை படைத்தத்தான் ஆண்டவன். அனைத்தும் மனிதனின் இன்பத்திற்காகத்தான்" என்பது. அதோடு சமூகம் குடும்பம் என்பதையும் தாழ்ந்து, தனிமனிதத்துவத்தை முன்னிறுத்துவது. அதீதமாக இயற்கையை சுரண்டி வாழ்ந்ததன் காரணமாக வெளிநாட்டவரின் வாழ்க்கை முறை கொஞ்சம் தடபுடலாக இருந்தது. பாரம்பரியத்தின் அறிவு வழியை அடித்ததன் காரணமாக வெளிநாட்டவரின் ஆடம்பர மாயத்தோற்றத்தில் மயங்கி நிற்கிறோம். வெளிநாட்டு தத்துவ தாக்கம்தான் நம் அரசியலமைப்பு சட்டத்திலேயே தனிமனிதத்துவம் மேலோங்கி நிற்க காரணம். இன்றைய இயற்கை-சமூக சீரழிவுகளுக்கு வெளிநாட்டு மத-சித்தாந்த தாக்கங்களே மூல காரணம்.

Monday, 10 February 2014

கட்டமைப்பு வசதி

ஊரில் பார்த்தேன்.. கட்டமைப்பு வசதி செய்கிறோம் னு, தேவையற்ற இடங்களில் ரோடு பாலம்.. இதன் அரசியல் என்ன..? மலைகளை அழிப்பதா..? வெறும் சிமண்ட் கட்டுமான நிறுவன லாபம், ஓட்டரசியல என்று தோன்றவில்லை.. சீதோஷ்ண நிலையை சீரழிக்க நினைக்கிறார்களா..? அதனால் யாருக்கு என்ன லாபம்..?? 

கிராமங்கள் தோறும டோய்லெட்கள் திணிக்கப்படுகிறது.. மலைக்கிராமங்களில் கூட.. இதில் கிறிஸ்தவ மிஷநரிகளும் தீவிரமாக உள்ளனர். உலகமய-வணிகமய-நகரமய அரசியலா..? தேசத்தை யாருக்கு வசதியாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்..??

வீடுகள் முழுக்க கிரானைட் மார்பில் போட்டுவிட்டு மழை இல்லை என்று புலம்ப; மற்றவர்களை குற்றம் சொல்ல அருகதை இல்லை. முப்பது வருடம் மட்டுமே ஆயுள் உள்ள தற்கால வீடுகளில் கிரானைட்களை காணும் போது மீண்டும் சரி செய்யவே முடியாதபடி, எங்கோ ஒரு பகுதியின் சீதோஷ்ண நிலையை கெடுத்து வாழ்வாதாரத்தை அழித்துள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். என் கிராமத்தில் இதுவரை இரண்டு மலைகள் காணாமல் போய்விட்டன.

Wednesday, 5 February 2014

'வீரிய வகை' நாட்டு கோழிகள்

தற்காலங்களில் ஓட்டல்களில் நாட்டு கோழி வகை உணவுகள் பிரபலமாகி வருகின்றன.. இவை பெரும் பித்தலாட்டம்.. நாட்டு கோழி என்பது, எவ்வித ஜீன் ஹார்மோன் மாற்றமும் இன்றி, இயற்கையாக மண்ணில் உள்ள புழு, பூச்சிகள், குப்பை, தானியங்கள் போன்றவற்றை உண்டு வளரும் கோழிகள்.. தற்போது கடைகளில் கிடைப்பது கூண்டுகளில் வளர்க்கப்படும் 'வீரிய வகை' நாட்டு கோழிகள். ஹார்மோன், ஜீன் மாற்றங்களோடு பார்க்க நாட்டு கோழிகள் போலவே இருக்கும்.. தின்பது செயற்கை கோழி தீவனங்கள்.. பெயர் மட்டும் நாட்டு கோழி..

இது போன்ற உணவுகள் விஷத்திலும் கடும் விஷம்..