மீடியாக்கள் செய்தி வெளியிடும் போது அரசு வேறு கெயில் வேறு என்பது போல, கெயில் நிறுவனம் குழாய் பதிக்கிறது; கெயில் வழக்கு நடத்துகிறது; கெயில் வாதாடியது என்கிறார்கள். கெயில் என்பது அரசு நிறுவனம் என்று ஊருக்கே தெரிந்த விஷயம் என்றாலும், அரசாங்கம்வேறு கெயில் நிறுவனம் வேறு என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக கிராம மக்கள்.. அவர்களுக்கு...
தமிழ்நாட்டில் இயற்கை விஞ்ஞானிகள், பூவுலகின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் யாரும் கெயில் பிரச்சனைக்கு வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கொங்கு பகுதியில் இருந்து மத்திய/மாநில அரசு அதிகாரத்தில் இருப்பவர்களும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் கெயில் என்ன அவ்வளவு பெரிய கொம்பனா..? கெயில் மத்திய அரசின் நிறுவனம் தானே..??
கேட்க நாதியற்ற தமிழன் என்று முழங்கியவர்கள் கண்களுக்கு கொங்கு மக்கள் தமிழர்களாக தெரியவில்லையா..?? அல்லது கொங்கு பகுதியில் ஓட்டு வங்கி சிதறி கிடக்கிறது என்ற இளக்காரமா..??
இனி திராவிடன் என்றோ, தமிழன் என்றோ, இயற்கை போராளி என்றோ சொல்லிக்கொண்டு யாரும் தயவு செய்து என்னிடம் பேசாதீர்கள்..!
No comments:
Post a Comment