Tuesday 31 December 2013

நீதிமன்ற தீர்ப்புக்கள்

கடந்த ஆறு மாதங்களில் நீதிமன்ற தீர்ப்புக்கள் செய்திகள் மூலம் நான் அறிந்த வகையில் எனக்கு சில குழப்பங்கள் உண்டு..

௧. பெண்ணின் திருமண வயது 18.. வயது 18 முன்னரே கூட பெண்ணின் அனுமதியோடு உடலுறவை நீதிமன்றம் அனுமதிக்கிறது.. இதற்கு என்ன அர்த்தம்..?? அப்படியானால் திருமண வயது என்ற ஒன்று எதற்கு? திருமணம் என்பதற்கு என்ன வரையறை சொல்கிறார்கள்..? 

௨. உடலுறவு கொண்டாலே திருமண அங்கீகாரம் என்கிறார்கள். திருமணம் செய்த பெண்ணுக்கு கணவனின் பரம்பரை சொத்திலும் பங்குண்டு என்கிறார்கள்..

௩. சட்டம் அனுமதிக்கும் இவ்வாறான தனிமனித விபசாரங்களுக்கு என்ன காரணம்? இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன வழி? அவர்களின் உரிமைகள் எப்படி..

இது அனைத்தையும் பெர்முட்டேசன் காம்பினேசனில் பல சூழல்களை கற்பனை செய்து பார்த்தால் குழப்பம் தான் வருகிறது...

No comments:

Post a Comment