Tuesday 31 December 2013

திமில்கள்

நம்மை பல காலமாக காத்து வந்த அரண்கள்.. இந்த திமில்கள்.. கம்பர் தனது ஏர் எழுபது நூலில், ஏர் இழுத்ததால் இந்த திமிலின் மேல் படர்ந்திருக்கும் கரையை குறித்து ஏற்கனவே ஒரு பாட்டெழுதியுள்ளார்.

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை 
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே

அதாவது, நீலகண்டனாகிய சிவபெருமானின் கழுத்துக்கறை விண்ணவர் அமுதுண்ண வழி செய்தது. சீர் பெருக்கும் வேளாளர் தம் எருதுகளின் திமிலின்பால் ஏற்பட்ட சுவடானது மண்ணில் உள்ளவர்க்கு அமுதூட்டுவதோடு பூவுலகில் தர்மம் நிலைபெற செய்து விண்ணுலகையும் காப்பதாம்..


No comments:

Post a Comment