Tuesday 31 December 2013

பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள்

தற்காலங்களில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணெய்கள் மூன்று வகைகளில் எடுக்கபடுகிறது. (பாமாயில் போன்ற விஷங்கள் சேர்க்கப்படவில்லை). 

௧.மரச்செக்கில் காளைகளை கொண்டு ஆட்டபடுவது 
௨.மரச்செக்கில் மோட்டார்களை பயன்படுத்தி எடுப்பது
௩.இரும்பால் செய்யப்பட ரோட்டரி செக்கில் எடுக்கபடுவது மற்றும் எக்ஸ்பெல்லர் இயந்திரத்தில் எடுப்பது.

இதில் முதல்தரமான எண்ணெய் மரச்செக்கில் மாடுகளை பயன்படுத்தி எடுக்கபடுவது. இரண்டாம் தரம் மரச்செக்கில் மோட்டார்களை பயன்படுத்துவது. மூன்றாவது இரும்பு உபகரணங்களை கொண்டு எடுக்கபடுவது.

மரச்செக்கில் மாடுகளை கொண்டு ஆட்டும்போது செக்கில் சூடு ஏறுவதில்லை (மெதுவாக ஓட்டபடுவதால்). இதுவே மோட்டார் பயன்படுத்தியும் இரும்பு செக்கை பயன்படுத்தியும் எடுக்கும்போது அதனால் ஏற்படும் சூட்டில் எண்ணெயின் நற்பலன்கள் பெரும்பாலும் அழிந்துவிடுகிறது. அக்காலத்தில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றில் செய்யப்பட்ட மருந்துகள் மரச்செக்கில் எடுக்கபட்டவையே. மக்க்களும் செக்கு கொண்டு எடுத்த எண்ணெயகலையே பயன்படுத்தினர். இன்று பெரும்பால்ம் செக்கு எண்ணெய் பயன்படுத்தாமையால்/உண்ணாமையால் ஆயுர்வேத மருந்துகள் வீரியம் குறைகிறது. Cold Pressed Oil (மரச்செக்கு எண்ணெய்) என்று கேட்கப்படும் எண்ணெய்களும் இரும்புசெக்கில்தான் ஆட்டபடுகிறது என்பது கொடுமை.

மக்கள் பயன்படுத்த மிக நல்ல எண்ணெய் என்பது எள் கொண்டு மரச்செக்கில் ஆட்டபடும் நல்லெண்ணெய்யே. நாட்டு மாட்டு நெய் மிக நல்ல வகை கொழுப்பு. கடலை எண்ணெய் வெளிநாட்டில் இருந்து வந்தது. நம் உடற்கூறு அதை எந்த அளவு ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவில்லை.



No comments:

Post a Comment