இதுபோல சிறுவயது முதலே வீட்டு பெண்களை காத்து வரும் இந்திய ஆண்கள், கிழவன் கட்டிய கோவணம் போல 'வலுவோடு' இருக்கும் இந்திய சட்டங்களின் பாதுகாப்பை நம்பாமல் எச்சரிக்கையோடு இருப்பதும்/இருக்க சொல்வதும் ஆணாதிக்கமா..??
அசாதாரண சூழலில் ஆண்கள் கூட தங்களை பாதுகாத்துக்கொள்ள இயலாத சூழலே பாரதத்தில் உள்ளது. இந்த நிலையில் பெண்ணிய வியாதிகளின் கிறுக்குத்தனமான பேச்சுக்கள் பெண்களை இன்னும் பல சிக்கல்களில்தான் தள்ளும்!
சட்டங்கள் தரும் தண்டனை மருந்து போல; பண்பாடு தடுப்பூசி போல. பாரதத்தில் சட்டங்களுக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பவர்கள் மிக குறைவு. கலாசார நியதிகளால் கட்டப்பட்டு இருப்பதுதான் இன்று இருக்கும் கொஞ்ச நஞ்ச சமூக பாதுகாப்பும். அதையும் சினிமா கரைத்து கொண்டு இருக்கிறது!
No comments:
Post a Comment