Tuesday, 31 December 2013

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்னும் 4000 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரின் ஏருதழுவல் விளையாட்டு வெறும் வீர விளையாட்டாக மட்டும் இல்லாமல் நம் பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள நாட்டுமாடுகளை கொண்டாடி இன விருத்தியும் பொதிகாளைகள் வளர்ப்பு போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய கட்டமைப்பாகும். ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் போன்றவை நாட்டு மாடுகளின் இனங்கள் காக்கப்படவும் அவற்றின் திறன்/செழுமையை கூட்டவும் தூண்டுகோலாக இருந்தன. நாட்டு மாடுகள் இன்றி இயற்கை விவசாயம்/பாரத சுய சார்பு பொருளாதாரம் சாத்தியமில்லை. பாரதத்தை தங்கள் சந்தையாக மாற்ற பல காலமாக நம் நாட்டுமாடுகளை அழிக்க வெளிநாடுகள் பல்வேறு வழிமுறைகளில் சூழ்ச்சிதிட்டங்களை செயல்படுத்தி வந்தன.

People for Ethical Treatment of Animals (PETA) என்னும் பன்னாட்டு மிருகவதை தடுப்பு அமைப்பு, ஜல்லிக்கட்டை தடை செய்ய கடும் பிரயத்தனம் காட்டி வருகிறது. வழக்கு தொடர்ந்து மீடியாக்களிலும் ஜல்லிக்கட்டை தவறாக சித்தரிக்க முயன்று வந்தது. PETA முகத்தில் கரி பூசியது போல, நீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது.

நாட்டுமாடுகளை ஒழித்துவிட்டு பாரதம் விஷ உர/பூச்சி மருந்துக்கும்; கலப்பின மாடுகள் என்னும் பன்றிகளின் பாலை குடித்து சர்க்கரை நோய், மந்தமான தாம்பத்திய வாழ்க்கை, மரபுக்கோளாறு போன்ற குறைகளோடு மருந்துக்கும்-வெளிநாட்டு நிறுவனங்களை அண்டி இருக்க வேண்டும் என்ற எண்ணமே இவர்கள் செயல்பாடுகளின் அடிநாதமாக உணர்கிறேன்.

உலகம் முழுக்க கடைபரப்பி அசைவ உணவு விற்கும் நிறுவனங்களையோ, இன்னும் வெளிநாடுகளில் மிக குரூரமாக மிருக வேட்டையும்/விளையாட்டும் நடப்பதையோ தடுப்பதில் PETA இவ்வளவு தீவிரம் காட்டவில்லை (இருந்தால் சொல்லவும்!). சைவ உணவுக்கு மாற சொல்லி சில அரைநிர்வாண படங்கள் தான் இணையத்தில் கிடைகின்றன. வெளிநாட்டு மாடல்கள் சம்பளம் என்ன என்று தெரியும். PETA விற்கு கொடுக்கப்படும் நிதியுதவி இது போன்ற மூக்கணாங்கயிறு இல்லாத நிர்வாகத்தின் செயல்களால் வீணடிக்கப்படுகிறது. இந்த மாடல்கள் விளம்பரம்தான் மிருகங்களை காக்க போகிறதா..?? PETA வுக்கு நிதியுதவி செய்து ஆதரிப்போர் யோசிக்கவும்.


PETA வின் உண்மை முகம் இன்று தமிழக மக்கள்/மாணவர்கள் மத்தியில் பரவி ஏகோபித்த எதிர்ப்பை PETA எதிர்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. சேவை செய்ய விரும்பவில்லை என்று சொல்லி ஒதுங்கி கொள்பவன் கூட ஒரு ரகம். ஆனால் PETA போன்றோர் தாங்கள் சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு உபத்திரவம் செய்து, உண்மையில் சேவை செய்வோரின் இடத்தையும் அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment