Tuesday, 31 December 2013

கெயில் - ஓரவஞ்சனை

கேரளாவில், முதல் கட்ட பணியில், நெடுஞ்சாலை ஓரமாக கேஸ்லைன் பதிக்க ராஜ்ய சபாவில் முடிவு செய்யப்பட்டு மத்திய சர்க்காரின் பிரஸ் இன்பர்மேசன் பியுரியு வெளியிட்ட அறிக்கை. அரசு வலைதளத்தில்..! 

http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=59695

ேரளாவிலும் டெல்லியிலும் நெடுஞ்சாலை ஓரமாக பதிக்கப்பட்ட கேஸ்லைன் தமிழகத்தில் மட்டும் நிலங்கள் வழியாக போயாக வேண்டுமா..? இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரத்தில் இருக்கும் கெயில் நிறுவன தலைவர் யார்? அந்த நிறுவனத்தில் முக்கால் பங்கு வைத்திருக்கும் மத்திய சர்க்காரால் அந்த நிறுவன தலைவரை மாற்ற முடியாதா..?? திட்டத்தை நிறுத்த முடியாதா??

இதை விட்டுவிட்டு மாநில சர்க்கார், மத்திய சர்க்கார், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கெயில் நிறுவனம் என பல அடுக்களாக/கோணங்களாக பிரித்து தலையை சுற்றி மூக்கை தொடும் கண்ணாமூச்சிகள் எதற்காக..??

கேரளாவில் போராடிய கம்யுனிஸ்ட்கள், மத்திய சர்க்கார் ஒரு புறம.. இங்கே தமிழுணர்வாளர்களும், திராவிட மணிகளும் ஊமையாகிவிட்டனரே..! அப்படியானால் கொங்கு மக்கள் தமிழரும் இல்லை, திராவிடரும் இல்லையா..? இயற்கை காவலர்களும், சமூக/முற்போக்கு சிந்தனையாளர்களும் மவுனமானதன் நோக்கம் என்ன..?? உங்களை கட்டி போட்டு வைத்திருக்கும் சக்தி எது..?? ஜெயமோகன் சொன்னது போல நீங்கள் எல்லாம் அந்நிய நிதிக்கு விலை போய், வெளிநாட்டு ஏஜென்ட்களாகத்தான் செயல்படுகிறீர்களா..??



No comments:

Post a Comment