வெள்ளை யானை நாவலில் 1870 களில் ஏற்ப்பட்ட பஞ்ச காலங்களில் மேல்சாதியினர் அடித்தட்டு மக்களின் பஞ்ச சாவுகளை தடுக்க முயலவில்லை என்றும் அந்த விசயத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும் வெள்ளை அரசும் கொஞ்சம் மனித நேயத்தோடு நடந்தது போலவும் திரு ஜெயமோகன் சொல்லியிருப்பது எப்படி என தெரியவில்லை..
எங்கள் கொங்கு தேசத்தில், சக்கிலியர்-பறையர் சாதியை சேர்ந்த பெரியவர்கள் கேட்டால் அவர்கள் முன்னோர்கள் சொன்னதை இன்றளவும் சொல்வார்கள்; வயல் வேலை எதுவுமற்ற பஞ்ச காலத்தில் கவுண்டர்கள் தங்கள் விதை நெல்லையும் கூட கஞ்சி காய்ச்சி கொடுத்து தங்கள் குடிபடைகளை காத்த வரலாற்றை.. குழந்தைப்பால் என்ற வழக்கம் இன்றளவும் உண்டு.. (குழந்தைகளுக்கு தினசரி பால் இலவசம்). முதலில் பஞ்சம் வர காரணம் என்ன? வெள்ளையர்களின் கட்டற்ற உணவு ஏற்றுமதி, பாரம்பரிய உணவுபயிர் தவிர்த்து பணப்பயிர்களை உழவர் தலையில் திணித்தமை, நீராதாரங்களை சீரழிய விட்டமை, பாரம்பரிய நிர்வாக முறைகளை ஒழித்து தங்கள் அடிவருடிகளான முட்டாள் கொடுங்கோலர்களை நியமித்தமை போன்றவையே.. பஞ்சம் வந்தால் தான் தங்கள் பாரம்பரிய மரபுகளை விட்டு வெளியே மக்கள் வருவார்கள் அப்போது மதம் மாற்ற வசதியாக இருக்கும் என்ற மிஷனரிகள் சூதுக்கு தலையசைத்தது வெள்ளை அரசு என்ற கருத்தும் உள்ளது. கிட்டத்தட்ட பரதேசி படம் ஞாபகம் வரும்.. இப்படியான கள தகவல்கள் இருக்க வெள்ளையானையை எப்படி நம்புவது?
பெயருக்கேற்றாற்போல வெள்ளையானை இல்லாத ஒன்றுதானோ?
நண்பர்கள் கமென்ட்:
Jaivanth Selvakumarஉடுமலையில் வடபூதிநத்தம், இராகல்பாவி, சுண்டக்காம்பாலயம் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள பள்ளர், மாதாரி, உப்பிலிய நாயக்கர் ஆகியவர்களுக்கு வறட்சியால் எதுவும் விளையாமல் அவர்களுக்கு வேலையுமில்லாமல் இருந்த சமயத்தில் எனது பாட்டையன் தினம் ஒரு நேரம் கூழ் என எங்கள் வயலில் ஒரு ஆசாரமே வைத்து 1 வருடம் காப்பாற்றியதாக வடபூதிநத்த பள்ள பெருசுகள் என் அப்பாவிடம் சொல்லி கேட்டுருக்கிறேன். ஆனால் வால்பாறை பக்கம் அதுக்கும் வழியில்லாமல் ஒரு வேலை பாலுக்கும், மக்கானிக்கும் மதம் மாறியதாக எனது அப்புச்சியின் அப்பாரைய்யன் காலத்தில் நடந்த செய்தியும் உண்டு. இதனையெல்லாம் ஆவணப்படுத்த அவர்களிடம் இது இப்படி நடந்தது என எழுதிக்கொடுங்கள் என்று எந்த கவண்டனாவது செய்வானா?? சுத்த பைத்தியகாரன் போல ஜெயமோகன்.. பெருமைக்காக பதிவு செய்யவில்லை. ஆயிரம் பேர் செய்ததில் நான் ஒருவரையாவது சுட்டிக்காட்டும் அளவுக்கு மட்டுமே என்னால் முடிந்தது என ஆதங்கமும் உள்ளது. செய்திக்கு நன்றி
Boopathi Gounder பெண்கள் அளித்த பெருங்கொடைகள்: கொங்கு வேளாளர் குடும்பத்துப் பெண்கள் குடும்பப் பொறுப்பிலும், விவசாயத்திலும் பெரும்பங்கு வகித்ததோடு சமூகப் பணிகளையும், சமயப் பணிகளையும் மேற்கொண்டு சிறந்து விளங்கியுள்ளனர். திருக்கோயில் திருப்பணிகளோடு விளக்குகள் கொடையளித்ததிலும் ஆண்களுக்குச் சரி சமமாகப் பங்கு கொண்டுள்ளனர். சோழ பாண்டிய நாடுகளில் அரண்மனை அரச மகளிர் தவிர ஏனைய மகளிர் செய்த கொடைகள் அளவில் சிறியன. ஆனால் கொங்கு வேளாண் பெண்கள் தனித்தும் தம் கணவரோடு சேர்ந்து பற்பல கொடைகளைச் செய்துள்ளதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
அவிநாசிதேவன் மனைக்கிழத்தி தேவன் சொக்கி (காடைகுலம்)
அன்னிகாவன் மனைக்கிழத்தி கேசி (கொற்றந்தை குலம்)
அதிராசராச வஞ்சி வேளான் மணவாட்டி (பூச்சந்தை குலம்)
கண்ணன் பொத்தி மனைக்கிழத்தி சிறிய கண்டி (செவ்வாயர்குலம்)
கறுப்பகவுண்டன் பெண் கங்காத்தாள் (மணியகுலம்)
காங்கய தரையன் மனைக்கிழத்தி ஆண்டியான் மங்கையர்க்கரசி (சாத்துவாய் குலம்)
கேசன் மனைக்கிழத்தி அந்தியூராண்டி (சாத்தந்தை குலம்)
கோவன் மனிச்சர் மனைக்கிழத்தி உண்ணாடி (பனங்காடை குலம்)
சிலம்பன் நீலன் மனைக்கிழத்தி சிட்டன்காவி (பில்லர் குலம்)
சிறியான் சடையான் மனைக்கிழத்தி தாவந்தாவி (சாத்தந்தை குலம்)
சொக்கன் மனைக்கிழத்தி உடையான் மகள் குப்பாண்டி (கொள்ளி குலம்)
வீரகாமிண்டன் உடையாண்டான் மனைக்கிழத்தி வாமதேவன் மகள் பிள்ளையம்மை (ஆவ குலம்)
சின்னயகவுண்டன் அகமுடையாள் சிவகாமியம்மாள் (ஓதாளர் குலம்)
சொக்கன் நடுவிலான் மனைக்கிழத்தி சிறுப்பெண் (பில்லர் குலம்)
திருவானைக்காவன் விச்சாதிரன் மனைக்கிழத்தி ஆளுடையாள் (படைத்தலையர்)
நல்லிசையாளன் மகள் அஞ்சாதான் மனைக்கிழத்தி நம்பியம்மை (படைத்தலையர்)
நம்பி மனைக்கிழத்தி பிள்ளையாள்வி பாவை பிள்ளையம்மை (படைத்தலையர்)

இதுபோல இன்னும் எத்தனை எத்தனை பேரின் கொடைகளும் தியாகங்களும் பதிவு செய்யப்படாமல் போனதோ தெரியவில்லை.
No comments:
Post a Comment