பொங்கல் விழா! - ஒவ்வொரு அசைவிலும் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றும் விழா. கிராமங்கள் தோறும உள்ளூர் விளையாட்டுகள் விழா நிகழ்ச்சிகள் மற்றும் ஈரோட்டு மஞ்சள், காங்கேயம் காளை, கிராமத்து பானை, மாக்கோலம், கும்மி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா என்று ஒவ்வொரு விசயமும் கலப்படமில்லா பாரம்பரிய வாழ்க்கை முறை.
ஒவ்வொரு நாட்டுக்கும்-இனத்துக்கும் வருடத்தின் விழாகாலம் என்ற ஒன்று உண்டு. அமெரிக்க ஐரோப்பியர்களுக்கு கிறிஸ்துமஸ், சீனர்களுக்கு சீன புத்தாண்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரம்ஜான், இந்தியர்களுக்கு பொதுவாக தீபாவளி போன்று தமிழர்களுக்கு (நமக்கே நமக்கான!) விழா காலம் என்றால் அது பொங்கல் தான். நான்கு நாள் விழா, விவசாயத்தை மையப்படுத்தி கொண்டாடும் உலகின் ஒரே இனம் நம் இனம்-ஒரே விழா பொங்கல் விழா. இது அந்நாளில் சமூகத்தில் உழவர்களே ஆதிக்கம் செலுத்தியதன் அடையாளம்!
அறுவடை முடிந்தபின் தேவையற்றதை முதல் நாள் கழித்துவிட்டு, கடவுளுக்கும்-பூமிக்கும்-நா ட்டு மாடுகளுக்கும் நன்றி சொல்லிவிட்டு, பின்னர் நம் உறவுகளை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து அடுத்த வெள்ளாமைக்கான திட்டமிடுதலையும் முடித்து ஒரு வருடத்தின் Reset Point போல இந்த விழா உள்ளது..!
தமிழர்கள் வாழ்க்கைக்கும், பொருளாதார சுதந்திர-தற்சார்பு நிலைக்கும், பண்பாட்டுக்கும் நீக்க முடியாத காரணிகளாக இருந்தவை பாரம்பரிய விவசாயமும் நாட்டு மாடுகளும் தான் என்பதை நினைவூட்டி சொல்லுவது இதன் சிறப்பு. (அந்த கால தமிழனை சொன்னேன்! இப்போது உள்ள கார்பரேட்களின் செக்குமாடுகளை இல்லை!)
பொங்கல் விழாவிலேயே இன்றைய விவசாய பிரச்சனைகளுக்கான தீர்வு ஒளிந்துள்ளதை உணர வேண்டும். வரும் காலத்தில் இயற்கை வேளாண்மை-நீர் மேலாண்மை-நாட்டு மாடு காத்தல்-பாரம்பரிய விதை காத்தல் போன்ற விசயங்களை மனதில் நிறுத்தி அந்நிய கார்பரேட்
சூழ்ச்சிகளில் சிக்காமல் இருக்க முயற்சிஎடுப்போம்.
(குறிப்பு: மாடுகள் என்றாலே நாட்டு மாடுகள் தான். இயற்கை வேளாண்மை-சித்த மருத்துவம்-ஆன்மிகம் அனைத்திலும் நாட்டு மாடுகள் மட்டுமே. மாடுகள் போன்று தோற்றமளிக்கும் கலப்பின பன்றிகள் கணக்கில் வராது. அவற்றின் பால் ஒரு ஸ்லோ பாய்சன்-[சர்க்கரை, பாலியல் மற்றும் மரபு பிரச்சனைகளை பதுக்கி வைத்திருக்கும் வெடிகுண்டு], உழவுக்கும் உதவாது-மொத்தத்தில் அவை வெள்ளையன் விட்டு சென்ற நான்கு கால் குட்டி சாத்தான். அதன் பால் தயிர் நெய் போன்றவற்றை அபிஷேகதிற்கோ திருநீறு தயாரிக்கவோ மற்ற எந்த ஆன்மீக விசயங்களுக்கு பயன்படுத்தவே கூடாது.பெரும் பாவம்!)
பொங்கல் கொண்டாட்டத்தை உழவரின் சோகத்தை உதாசீனபடுத்தும் நிகழ்வாக எண்ணாமல், இனி வருங்காலதிர்க்கான புத்துணர்வையும் நம்பிக்கையும் அளிக்கும் விழாவாக நினைப்போம்.
No comments:
Post a Comment