அக்னிஹோத்ரம் பாரம்பரிய அறிவியல் தந்த மற்றொரு அற்புதம். காலையும் மாலையும் பத்தே நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பஞ்சகவ்யம் நிலத்திற்கு உயிரூட்டி, நுண்ணுயிர்சூழலை சீரமைத்து, வளப்படுத்துவது போல, அக்னிஹோத்ரம் காற்று & ஆகாய வெளியை சுத்தப்படுத்தி சீரமைக்கிறது. அதன் ஆற்றல மனித உடல் மற்றும் மனங்களை ஊடுருவுகிறது. போபால் விஷவாயு சம்பவத்தின் பின்னரே மேற்குலகம் அக்னிஹோத்ரத்தின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாம் உணர்ந்தோம். பாட்டன், பூட்டன் சொன்னால் பிற்போக்கு என்று ஆயிரம் கேள்விகள் வரும்; வெள்ளையன் சொன்னால் வாயில் விரல்வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்வதுதான் முற்போக்கு அல்லவா.
இன்று மேற்குலகம், அக்னிஹோத்ரத்தைக் கொண்டாடுகிறது; சுற்றுச்சூழலை சீரமைக்க தினமும் பின்பற்றுகிறது. இன்று புகுஷிமாவிலும் அணுக்கதிர்வீச்சிலிருந்து மீளவும், சுத்தப்படுத்தவும் அக்னிஹோத்ரம் செய்கிறார்கள். அக்னிஹோத்ரம் கொண்டு விதை நேர்த்தி, விவசாய செழிப்பு, மருத்துவம் போன்றவையும் செய்யப்படுகிறது (Homa Farming; Homa therapy). முற்காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் அக்னிஹோத்ர பிராமணர்கள் இருந்தனர். தினமும் அக்னிஹோத்ரம் செய்து மருந்தும் & உரமுமான அதன் சாம்பல் ஊர் குளங்களில் கொட்டப்பட்டது. அதனால் விவசாயமும், மக்கள் உடல்நலமும் செழித்தது. பாரம்பரியமாக அக்னிஹோத்ரம் செய்தவர்கள் கூட இன்று கைவிடும் சூழலைக் கடந்து தற்போது புத்துயிர் பெற்று வளர்ந்து எல்லா தேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.
ஆரியம், பெண்ணியம் என்று ஈயம் பூசி பிழைப்பு நடத்திய பிரிட்டிஷ் மற்றும் அவர்கள் வாரிசுகளான முற்போக்கு, திராவிட சக்திகளால் சாஸ்திரக்குப்பைகள் என்று பழிக்கப்பட்ட ஹோம வகைக்குள்தான் அக்னிஹோத்ரமும் அடங்கும். இவ்வாளவு தெரிந்தும் 'பூவுலகை' காக்க அவதாரமெடுத்த கம்யூனிஸ்ட்கள் இவற்றை புறக்கணித்தே வந்தனர். பாரம்பரிய ஞானத்தை மூடத்தனமென்று புறக்கணித்து வந்த கம்யூனிஸ்ட்கள் கூட கேரளாவில் "வேத அறிவியலை" ஆய்ந்து அறிய கருத்தரங்கம் நடத்தி, இவ்வளவு காலம் அவர்கள் செய்த அறியாமைப் பிழைகளை ஒப்புக்கொண்டு திருத்திகொள்கிறார்கள். ஆனால் இவ்வளவு காலம் இந்த முற்போக்கு மயக்கத்தால் நாம் இழந்தவற்றிற்கு என்ன பரிகாரம்?
ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்தில் பாத்க்கப்பட்ட பகுதிகளை அக்னிஹோத்ரம் செய்து சீராக்கும் முயற்சியில் அந்நாட்டவர்கள். |
அக்னிஹோத்ரம் பற்றி சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலே உள்ள வரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளக்கமாக ஒரு புத்தகமே எழுதும் அளவு விஷயங்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடிப்படிக்கவும். (அக்னிஹோத்ரம் எப்படி செய்யவேண்டும், அதன் தாத்பர்யங்கள் என்ன போன்றவற்றை கீழே கமெண்டில் லிங்க் கொடுத்துள்ளேன்). இயற்கை மீது பற்றுள்ளோர் உங்கள் ஊரில், கோயில்களில் அக்னிஹோத்ரம் நடைபெற ஆவண செய்யவும். இந்த அக்னிஹோத்ரத்திற்கும் நாட்டுப்பசுவின் நெய்யும் சாணமுமே மூலப்பொருள். நாட்டுப்பசுக்கள் நம்மையும், பூமியையும், காற்றையும், நீரையும், விண்ணையும் வளப்படுத்தி, புனிதப்படுத்த மூலகாரணமாவதால் நாட்டுப்பசுக்கள் புனிதம் தான்!
Preview by Yahoo
| |||||||