Tuesday, 31 December 2013

நீயா நானா - பொதுமக்கள் மனக்கருத்து

நேற்று நடந்த நிகழ்ச்சி. நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் தூரத்து உறவினர் தன் மனைவி மகளோடு வந்திருந்தார். மாலை சாப்பிட்டு பேசிகொண்டிருந்தார்கள். ஒரு நாள் தங்கி செல்லும் திட்டம். திடீர் என்று ஏதோ நினைவு வந்தவராக என் நண்பரிடம் ரகசியம் பேசுவது போல அழைத்தார். அவர்கள் உரையாடல்,

உறவினர்: நீங்க இன்னிக்கு விஜய் டிவி-நீயா நானா பாப்பீங்களா மாப்ள..??

நண்பர்: இல்லைங்க மாமா, அதெல்லாம் பார்க்கர வழக்கம் இல்ல.. என் பொண்டாட்டி சண்டைக்கு வந்துடுவா... பாக்கணும் ணா சொல்லுங்க மாமா பாப்போம்..

உறவினர்: ஓ.. சரி சரிங்க மாப்ள...

நண்பர்: ஏன் மாமா?

உறவினர்: இல்ல, எம்பொண்ணு கிட்ட என் பொண்டாட்டி 'நீயா நானா லாம் நல்ல குடும்பத்துல பாக்க மாட்டங்க, கெட்ட பழக்கம்' னு சொல்லி வச்சிருக்கா.. நீங்க அதை பார்க்கர மாதிரி இருந்தா கெளம்பீர்லாம்.. இன்னொரு நாள் வந்துக்கலாம் னு நெனச்சேன்.. அதான் கேட்டேன்.. அதோட எம்பொண்ணு உங்கள தப்பா நெனைக்க கூடாதுல.. அதான் மாப்ள..

நண்பர்: மாமா.. அக்கா ரொம்ப உசாருதான்... உண்மையைத்தான் சொல்லிருக்காங்க... நம்ப தலைல நாமலே மண்ண வாரி போட்டுக்குற மாதிரி.. என் பிரண்டு இன்னு உசார்.. விஜய் டிவியே கட் பண்ணி விட்டுட்டான்.. ஹ ஹ ஹா..!

என்னய்யா நடக்குது..!?
 

No comments:

Post a Comment