Friday, 25 July 2014

நல்ல தருணங்கள்

கஷ்டமான காலங்களில் பல நல்ல நினைவுகள்தான் நம்மை சுலபமாக மீட்டுக்கொடுக்கும்.. அறிமுகமற்றவர்கள் சொல்லும் வாழ்த்துக்கள், தாய்மாமா போல நம் மனத்துக்கு நெருக்கமான உறவுகளோடு கழித்த தருணங்கள், பெரியவர்கள் அகமகிழ்ந்து சொல்லும் ஆசிகள், நமக்கு முதல் குழந்தையான நம் சகோதரி குழந்தைகளோடு செலவழித்த தருணங்கள்,ஒரு சிலரின் நல்வாழ்வுக்காவது நாம் காரணமாக அமைவது, வீட்டிற்கும் ஊருக்கும் நாம் ஆக்கப்பூர்வமாக செய்த வேலைகள், நாம் வளர்த்து பலன் கொடுக்கும் மரங்கள், பசுக்கள், நீர்நிலைகள் மற்றும் பொது அமைப்புக்கள், சில வெற்றித்தருணங்கள், நம்மையே சிரிக்கச்செய்யும் சில அபத்தமான மனநிலைகள், நாம் விரும்பும் சூழலில் கழித்த தருணங்கள், பள்ளி நாட்கள் மற்றும் நல்ல நண்பர்களோடான உரையாடல்கள்.. இவையெல்லாம்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தவும் செய்யும்..

No comments:

Post a Comment