ஆர்வம் என்று உள்ளார்ந்த விசயமாக ஒன்று இருப்பதாக கருதவில்லை. ஆர்வம் புறவயமானது. ஒன்றில் நாம் இன்புறும்போது அதில் ஆர்வம் அதிகரிக்கிறது. இன்பம் என்பது உணர்தலில் இருக்கிறது. சுவையை, மணத்தை, சுகத்தை உணரும்போது இன்பம் ஏற்படுகிறது. ஒரு சங்க இலக்கிய பாடலை பதம் பிரித்து அதன் பல பொருட்களை உணரும்போது பரவசம் ஏற்படுகிறது. அதில் ஆர்வம கூடுகிறது. புரியாவிட்டால் அட போங்கடா என்று அவ்விடம் விட்டு நகர சொல்கிறது. அதுபோல, நம்மால் உணர/புரிய கூடிய விசயங்களில் நமக்கு இன்பம் உண்டாகி, ஆர்வம வருகிறது. நம் புறச்சூழலில் நம் காணும் விசயங்கள், கற்பிக்கப்படும் விஷயங்கள், சாகசங்களால் ஏற்படும் பரவசம் காரணமாக ஈர்க்கபப்டும் விஷயங்கள் என்று, நம் ஆர்வம உள்ளில் இருந்து வெளியே இல்லாமல் வெளியில் இருந்து உள்ளே செல்கிறது. ஆழ மனதில் பதியும் இந்த விஷயங்கள் சந்தர்பம் வரும்போது மீண்டும் வெளிப்படுகிறது.
நிபுணர்களாக துறைக்குள் வந்தவர்களைவிட ஒரு துறைக்குள் சென்று ஆர்வத்தால் கற்று நிபுணரானவர்களே அதிகம். பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை தூண்டவும், பாரம்பரிய கலைகளை/நிபுணத்துவத்தை அழிக்கவும் தொடர்ந்து சுய ஆர்வம என்ற factor பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் சண்டேச நாயனார்கள் மிக குறைவு என்றே கருதலாம். விதிவிலக்குகள் விதிகள் செய்யாது.
No comments:
Post a Comment