நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவமும், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் வலதுசாரி, இடதுசாரி, முற்போக்கு, பிற்போக்கு, குறுக்குபோக்கு என்று எல்லா தரப்பினரும் நன்கு அறிந்துள்ளார்கள்/ ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பிறகு என்ன, நாட்டு பசுக்கள் வதையை தடை செய்வதில் என்ன சிக்கல்..? நாட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். நாட்டு பசுக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். இது ஓவர் என்று சொல்வோர், இந்தியா போன்ற நாட்டில் கூட பசுக்களுக்கு தனி அமைச்சகம் இல்லாவிட்டால் வேறு எங்கு நிறுவுவது? பசுக்களில் இருந்து உணவு, மருந்து, உரம், ஊட்டச்சத்து என நம் நாட்டின் இறக்குமதிகளில் பெருமளவு குறைக்கும் சக்தியும், ஏற்றுமதி வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. பசுக்களில் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. பிரத்யேக அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், கல்லூரிகள் அவசியம் தேவை.
No comments:
Post a Comment