உள்ளூரளவில் மட்டுமல்ல, உலகளவிலும் வெள்ளை சர்க்கரையை மக்கள் புறக்கணிக்க துவங்கியதோடு அதே வேகத்தில் பனை பொருட்களை மாற்றாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். என் ஊர், வட்டாரம் என நான் நேரடியாக கண்ட வகையில்,
*என் நண்பன் வேலை செய்யும் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தருகிறது. அந்நிறுவனம் போன மாதம் முன்வைத்த கோரிக்கை ஒன்றை கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். "எங்கள் பிஸ்கட்களை பனங்கருப்பட்டி-பனங்கல்கண்ட
*ஈரோடு மாநகரில் வாழும் என் நண்பர் ஒருவர்; ஈரோட்டில் பெரும்பான்மையானோர் அறிந்திருக்கும் மனிதர். வீட்டிற்கு அழைத்திருந்தார். வீட்டில் கருப்பட்டி தான் உபயோகித்தார். "உங்கூர்ல சுத்தமான கருப்டி கெடச்சா எவ்வளனாலும் வாங்கீருங்க.. நா வாங்கிக்கரன்" என்றார்.
*என் கிராமத்து நண்பர் வீட்டில் பிரசங்கமே நடந்தது. அதை பற்றி தனி பதிவே எழுதுகிறேன். அப்போது அவர் வீட்டம்மாவிடம் கருப்பட்டி கொத்தமல்லி காப்பி கொடுக்க சொன்னார். சொன்ன காரணம், "டவுன் கேப்மாரிங்க, ஊட்டுக்கு வந்தா டீ/காப்பி வெள்ள சக்கரைல போட்டு குடுப்பன்; அந்த மாட்டெலும்பு சூப்ப குடுச்சாத்தான் அவுனுகுளுக்கு ஒனத்தியா இருக்கும்.. குடுச்சுட்டு சாகட்டும்.. நம்மாளுங்க, வேண்டியவங்க வந்தா கருப்பட்டி காப்பிதான்.." என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்களும் பிரமிக்க வைக்கும். எனக்கோ மனத்தில் 16 வயதினிலே படக்காட்சி ஓடியது; டீக்கடையில் கிராமத்து ஆட்களுக்கு கருப்பட்டி டீயும் பட்டணத்து டாக்டருக்கு வெள்ளை சீனி டீயும் கொடுக்குமாறு கவுண்டமணி சொல்வார்.
சீமைமாட்டு விஷப்பால் எப்படி கேடு செய்யுமோ அதே போலத்தான் வெள்ளை சர்க்கரை உடல் நலம், மன நலம், தேச பொருளாதாரம், இயற்கை வளம் ந அனைத்தையும் பாதிக்கிறது. காமதேனுவாகிய நாட்டுபசுவை கொல்வதும், கற்பக விருட்சமான பனையை வெட்டுவதும் வெவ்வேறல்ல.. பாரதத்தில் மட்டுமல்ல, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நூல்களிலும் பனையை பற்றி மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment