ஜல்லிக்கட்டை
நடத்துவதற்கு மட்டும் இது ‘ஏறு தழுவல்’ நாங்கள் பாரம்பரியமாக
பின்பற்றும ‘தமிழர் கலாசாரம்’ என்று மார்தட்டி
சொல்லிக்கொண்டு காரியம் சாதித்தீர்கள். நல்ல விஷயம்தான், வாழ்த்துக்கள். ஆனால் “ஆநிரை
மீட்டல்” என்பதும் இதே டமிழர் கலாசாரத்தில் காலம் காலமாக இருந்ததுதான். பசுக்களை வேற்று
நாட்டவன் கடத்தி சென்றால் அவமானமென கருதி அதற்கு போர் நடத்தி வென்று மீட்டு
வந்தவனுக்கு ஊர்களை, விருதுகளை வழங்கி, அந்த போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு
வீரக்கல் நடுகல் என்று மரியாதைகள் செய்ததும் தமிழர் கலாசாரம் (என்று கூறிக்கொள்ளும்
சேர சோழ பாண்டிய தேச கலாசாரம்) தானே..? இன்று கேரளாவுக்கு கடத்தி செல்லப்படும்
பசுக்களை மீட்க மட்டும் எந்த தமிழனும் பிறக்கவில்லையா? அதை காத்து மீட்பது தமிழர் கலாசாரம்-மரபு-பாரம்பரியம் இல்லையா??
இதை கேட்டால், கலாசார-பண்பாட்டு காவலன் என்று கட்டம் கட்டுவது.. உண்மையில்
நீங்கள் பட்டம் கட்டுகிறீர்கள்.. மகிழ்ச்சி.. எங்கள் சமூக வரலாற்றிலோ, எங்கள்
பாட்டன் பூட்டன தலைமுறையிலோ, இந்த தலைமுறை சொந்தபந்தங்கள் என எங்குமே நாங்கள்
கண்டிராத சில கல்யாணங்களை தமிழர் கலாசாரம் என்று வரையறை செய்து; அதை எதிர்த்த பெற்றோர்களை
கொடுமைக்காரர்கள் என்று பிம்பம் உருவாக்கி தாழ்வுபடுத்த முயன்றவர்கள்தானே நீங்கள்,
உங்களிடம் வேறு என்ன அரசியல் விளையாட்டுக்களை எதிர்பார்க்க முடியும்?
இன்று தமிழர் என்ற அடையாளத்தை லாபி கைப்பற்றி அந்த அடையாளத்துக்கு தவறான வரையரைகளை வகுத்து அதற்குள் எல்லாரையும்
பொருந்தி போக சொல்லி நிர்பந்தித்து வருகிறது. அதை மறுப்பவனை, இனவிரோதி என்றும்; அடையாள
மறுப்பு என்னும் அச்சுறுத்தலும் நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு சர்வதேச
அரசியல் விளையாட்டே. இவர்களின் வரையறைக்குள் ஒடுங்காமல் இருக்க (இவர்கள் வகுக்கும்)
தமிழன் அடையாளத்தை புறக்கணிப்பதில் தவறில்லை.
உண்மையில் ஏறு தழுவல் என்னும் ஜல்லிக்கட்டும், ஆநிரை கவர்தல் மீட்டல் என்பது
அனைத்தும் பாரதவர்ஷம் முழுக்கவே இருந்த வழக்கமாகும். விஸ்வாமித்ர மகரிஷியின் வரலாறு,
பரசுராமர் வரலாறு (கார்த்தவீர்யாச்சுனன்-ஜமதக்னி-பரசுராமர் போர்), த்ரௌபதி
பிறப்பின் காரணம், விராட தேச போர் என பல இடங்களில் இதற்கு உதாரணம் காணலாம்.
‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை
மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைதான். என் கிராமத்தில் பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள்
மானியம் வழங்கி சிறப்பித்த முன்னோர் வழியில் செல்வதில் மகிழ்ச்சிதான். இரவு தூங்க
செல்கையில் ஆத்ம திருப்தியும், மன நிறைவும் இருக்கிறது. ஊரை கெடுக்கும்
லாபிகளுக்கு இந்த நிறைவு நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. வாழும் வாழ்க்கைக்கு
அர்த்தம் வேண்டும் என்பது புரியும் காலம் வரும்.
No comments:
Post a Comment