பள்ளிபாளையம் மணி ஐயர்.. எங்க ஊர்காரர்; அன்றைய காங்கிரஸ்காரர்.. எவ்வளவோ பணிகள் கொடைகள் செய்த இவர், கடைசியில் தியாகிகள் பென்சன் தர சர்க்கார் முன்வந்தபோது "என் நாட்டுக்கு நான் செய்த கடமைக்கு எதுக்கு பணம் பென்சன் லாம்?" என்று மறுத்துவிட்டார். இன்று இவரது வாரிசு, எங்கள் ஊரில் மாவரைத்து பிழைக்கிறார். அவர் பெயரே மாவையர். மணி ஐயர் தானமாக கொடுத்த நிலத்தில் ஒரு பகுதி இருந்தாலும் அவர் இன்று கோடீஸ்வர ஐயர். காங்கிரசார் இவரை மறந்த போதும், எங்கள் ஊர் ஆர்.எஸ்.எஸ். காரர் மணி ஐயர் சேவைகளுக்கான அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள இவர்போன்ற போராளிகள், தியாகிகள், மக்கள் பிரதிநிதிகளால் தான் ஒரு இயக்கம் பேரியக்கமாக வலுப்பெருகிறதே ஒழிய மேலே இருக்கும் ஒரு சிலரால் என்பதெல்லாம் மீடியா ஹைப்.
பார்ப்பனீயம் என்று அரசியல் செய்தோருக்கு இவர்போன்ற எண்ணற்றோர் தங்கள் வாழ்க்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளனர். இளம் அரசியல்வாதிகளுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடம்.
(இவரது இயக்க கொள்கைகள் சரியானதா இல்லையா என்பது வேறு, ஆனால் அந்த கொள்கைகள் நாட்டுக்கு நன்மையளிக்கும் என்ற நன்ம்பிக்கையின் உந்துதலினால் தீவிர பணியில் ஈடுபட்டார் என்பதை மறக்க இயலாது.)
http://pallipalayamnemani.blogspot.in/