திருவருள் என்ற படம். அதில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான வசனம் வரும். "எல்லா நம்ம கைலதான் னு நெனைக்கற வரைக்கும் தான் இன்பம்-துன்பம் எல்லாம் நம்மை பாதிக்கும்... நம்மையே அவன்கிட்ட ஒப்படைச்சிட்டா, எதுவும் நம்மள பாதிக்காது" னு பாமர மொழியில் சொல்வார். உள்ளார்ந்த அன்பினாலோ, வெளிப்புற அழுத்தம் தாங்க இயலாமலோ அந்நிலை வரலாம். அந்த மனநிலையை அடைவதும், அந்நிலையில் வாழ்வதும், அதனால் கிடைக்கும் லேசான மனமும் அனுபவித்துணர வேண்டிய சுகம். வேலைப்பளு, சமூக அழுத்தங்கள், மனக்குமுறல்கள், பகை-பழியுணர்ச்சி, ஏக்கங்கள் என அனைத்து இரும்பு குண்டுகளும் நம்மில் இருந்து உதிர்ந்து போகும். அந்த மனநிலையில்தான் தெய்வத்தை உணர முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படியான மனநிலையால், நிகழ்காலத்தில் அதிகம் வாழ முடியும்; பொறுப்பின் அழுத்தம் பெரிதாக பாதிக்காது; தவறு செய்யும் எண்ணம்-சலனம் ஏற்படாது.
கோயில்கள் காவல்-நீதித்துறை பணிச்சுமையை குறைக்கும் என்பதன் அர்த்தமும் இதில்தான் உள்ளது.
No comments:
Post a Comment