சமஸ்கிருதம் பழமையான மொழி. பல்வேறு அரிய நூல்கள் இயற்றப்பட்ட மொழி. இன்று உள்ள பல மொழிகளின் மூல சொற்களை தன்னகத்தே கொண்டிருக்கும் மொழி. பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் தொண்மை மிகு கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக இருந்த மொழி. நாசாவும் கூட விரும்பும் மொழி ( நம் சொத்தின் மேன்மையை உணர்த்தவும் வெள்ளைகார துரைமார்கள் அங்கீகாரம் வேண்டுமல்லவா). இன்று பொலிவற்று இருக்கும் இம்மொழியை, அம்பேத்கர் சொன்னது போல் தேசிய மொழியாக்கி வளர்க்க வேண்டாம்; குறைந்தபட்சம் அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டுவருவதில் தவறேதும் இல்லையே. நம் தேசத்தின் பாரம்பரிய மொழிகளில் ஒன்று மீண்டு வந்துவிடக்கூடாது என்பதில் என்ன முனைப்பு? சமஸ்கிருதத்தை குப்பை என்று சொல்வோர்-பள்ளியில் கற்பிக்கப்படும் மெக்காலே குப்பையை என்னவென்று சொல்வீர்கள்?? ஒரு காலத்தில் ஹீப்ரு கூட செத்த மொழிதான்; இன்று ஒரு நாட்டின் தேசிய மொழி என்னும் அளவையும் தாண்டி வளர்க்கப்பட்டுள்ளது.
இதில் திணிப்போ கட்டாயமோ இல்லாதபோது ஏன் எதிர்க்க வேண்டும்?
இதில் திணிப்போ கட்டாயமோ இல்லாதபோது ஏன் எதிர்க்க வேண்டும்?
No comments:
Post a Comment