இயற்கை சீரழிவை தடுக்க குரல்கொடுப்போர் காணாத மிகப்பெரிய ஓட்டை ஒன்று உள்ளது. அந்த ஓட்டை நேரடியாக நம் கண் முன் தெரியாமையால் நமக்கு ஒரு மாயமானாக இருந்து போக்கு காட்டி வருகிறது. அது டேட்டாசென்டர்கள் எனப்படும் தகவல் மையங்கள். நம் இணையத்தில், பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஈமெயில்கள், ஆவணங்கள் அனைத்தும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அந்த நிறுவனத்தின் தகவல் மையத்தில் உள்ள கோடிக்கணக்கான சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கருதி, அதை பிரதி எடுத்து இன்னொரு டேட்டா சென்டரிலும் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல நூறு ஏக்கர பரப்பளவு கொண்ட டேட்டா சென்டர்கள் பல இடங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு டேட்டா சென்டரையும் குளிர்விக்க சிறப்பு வாய்ந்த ஏ.சி மெஷின்கள் வேண்டும். இவற்றை ப்ரெசிஷன் ஏர் கண்டிஷனிங் என்பார்கள். காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக குறுகிய அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும், என்பதற்காக இந்த சிறப்பு மெஷின்கள் பயன்படுகின்றன.
இந்த டேட்டா சென்டர்கள் வருடக்கணக்கில் நிற்காமல் இயங்கும். அதை அந்த ஏசி மிஷின்களும் நிற்காமல் வருடக்கணக்கில் குளிரூட்டும். இவை குளிரூட்ட பல நூறு மெகாவாட் மின்சாரம் சர்வசாதாரணமாக தேவைப்படும். அந்த மின்சாரம் தயாரிக்க பல லட்சம் டன் நிலக்கரி கப்பலில் சுமந்துவரப்பட்டு, எரிக்கப்படும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு டேட்டா சென்டரும் எவ்வளவு மோசமான இயற்கை பேரழிவை உண்டாக்குகின்றன என்பது புலப்படும். தற்போது மீடியாக்கள், சினிமா உட்பட பல்வேறு துறைகள் மூலமாக புகைப்படம்-குறும்படம் எடுக்கும் பழக்கம் நவீனத்துவ அடையாளமாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் பெரிய சூழ்ச்சி இது. ஏனெனில் சாதாரண ஆவணமா, ஈமெயிலோ சிறிய அளவு இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளும். ஒரு டிஜிட்டல் புகைப்படமோ, குறும்படமோ பல நூறு மடங்கு அதிக இடத்தை ஆக்கிரமிக்கும்.
No comments:
Post a Comment