பிறந்தநாள் என்பது நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம் நட்சத்திரம் வரும் நாள். நம் மன்னர்கள், ஆழ்வார்-நாயன்மார், பெரியவர்கள் என அனைவருமே இந்த நட்சத்திர முறையையே பின்பற்றினர்.
கொங்கதேசம் கரூரில் வாழ்ந்த எறிபத்தர்-மாசி ஹஸ்தம் |
ராஜராஜசோழன் என்னும் அருண்மொழிவர்மன்-பிறந்தநாள்: ஐப்பசி சதயம் |
கேரளா திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் அவர்கள் பெயரே அவர்கள் பிறந்த நட்சத்திரப்படி சுவாதி திருநாள் உத்தராடம் திருநாள் என்றுதான் இருக்கும்.
சுவாதி திருநாள் ராம வர்மா |
வீட்டின் பெரியவர்கள் ஆசி, கோயில்களில் வழிபாடு, எளியோருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.பிறந்தநாள் விழா என்பது உறவினர் நண்பர் என்று அன்று வீட்டுக்கு வருவோர் ஒவ்வொருவரும், நாட்டு பசுவின் நெய் விளக்கில் ஆரத்தி எடுத்து, திருநீறு இட்டு, அட்சதை போட்டு, வாயார வாழ்த்துவது தான் நம் பாரம்பரிய பிறந்தநாள் கொண்டாட்டம். இனி வரும் நாட்களில் அனைவரும் இதை பின்பற்ற முயற்சிப்போம்.
கோமாளி குல்லா போட்டு, மெழுகுவர்த்தியை வாயில் ஊதி அணைத்து, கேக் வெட்டி, அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளின் ஏக்கத்தை தூண்டி, அவர்கள் பெற்றோருக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தி கொண்டாடும் மேற்குலக பிழைகளை தவிர்க்க முயற்சிப்போம்.
புரட்டாசி திருவாதிரையன்று என் பிறந்தநாள். மார்க் செய்த கட்டுப்பாடுகளால் அக் 16 அன்று வாழ்த்துக்களைப் பெற்றேன். தற்போது பலரும் பாரம்பரிய முறையில் பிறந்த நாள் கடைபிடிக்க துவங்கியுள்ளனர். ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், மாசிமகம் என்று ஏரளாமான அவதார விசேஷ தினங்களை மாத-நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம். அரசர்கள், மகான்கள் அவர்கள் பிறந்தநாளை இதே போன்று நட்சத்திர அடிப்படையில் கணக்கிட்டு கொண்டாடுவதையும் அறிகிறோம். இவ்வாறு கொண்டாடுகையில் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நாம் பிறந்தபோது இருந்த இடத்திற்கே வந்திருக்கும்.ஆங்கில கேலண்டர் முறையில் தேதி மட்டுமே ஒத்து இருக்குமே தவிர கிரகங்களின்-இயற்கையின் அங்கீகாரமென்று எதுவுமில்லை. வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி.

அருமை.என்னுடைய கருத்தும் உங்கள் கடைசிப் பத்தியில் இருப்பதுதான்
ReplyDeleteஅருமை.
ReplyDeletesasi very nice infa.thanks sasi
ReplyDeleteKootru jekkattum.....
ReplyDeleteதிருவள்ளுவர் கூட வைகாசி அனுஷத்தில் தான் பிறந்தாராம்..... அதை அப்படியே உல்டா பண்ணி தைக்கு மாற்றிய பெருமை திராவிடவாத அரசியலுக்கே சேரும்.....
ReplyDelete