Tuesday, 31 December 2013

விழுந்த பணப்புழக்கம் எகிறும் வட்டி

விழுந்த பணப்புழக்கம் எகிறும் வட்டி 
*************************
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பண தட்டுபாடு நிலவுகிறது. தனியார் பைனான்சுகளில் சீசன் நேர வியாபாரம் போல சூடு பறக்கிறது. கடும் மின்வெட்டாலும் பொய்த்துப்போன (மழை/காவிரி) விவசாயத்தாலும் பணப்புழக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் வெகுவாக குறைந்துள்ளது.

தொடர்ந்து ஏறிய பெட்ரோல் டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் சேமிப்பு என்பது மிக அரிதாகி போய் உள்ளது. (இந்த வருட தமிழக வங்கிகளின் சேமிப்பு கணக்கு விபரங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்தி கொள்ளலாம்). இதனால் லோக்கல் நில/நகை அடமான கடனே நூற்றுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் விகிதத்திலும் அடமானம் இல்லா கடன்கள் நான்கு முதல் ஏழு ரூபாய் விகதத்திலும் புழங்குகிறது. அதற்கும்கூட பணம் கொடுக்க ஆள் இல்லா சூழல் நிலவுகிறது. ஐ.டி. மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் சேமிப்பும்கூட ஏறிவிட்ட விலைவாசியால் பெருமளவு குறைந்துவிட்டது.

இதனால் ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஆடம்பர பொருட்கள் வியாபாரம், முதலீடுகள் உள்ளிட்டவை சரிவின் பாதையில் நகர துவங்கியுள்ளன. ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஆடம்பர பொருட்கள் போன்ற முதலீடு சார்ந்த துறைகளில் புதிதாக முதலீடு செய்வது மிக குறைந்துவிட்டது..!



No comments:

Post a Comment