என் பிறந்தநாள் மகிழ்ச்சியாக துவங்கியது.. பொதுவாக எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பழக்கம் இல்லாவிட்டாலும், பதில் மரியாதை எதிர்பார்க்காது போனிலும், நேரிலும், முகநூலிலும் ஈமெயில் ளும் வாழ்த்து சொன்ன உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.. அர்த்தமுள்ள வாழ்க்கை தான் வாழ்கிறோம் என்று எண்ணும் அளவு இருந்தது.
அதோடு வருத்தமான விஷயமும் ஒன்று உண்டு. என் பிறந்தநாள் அன்று பக்ரீத், எனது ஊரில் 30 நாட்டுபசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. பசுக்களை மீட்டதற்காக நிலங்கள் பரிசளித்து, பசுக்களை காப்பதை தங்கள் தர்மமாக-கடமையாக கருதிய முன்னோர் வாழ்ந்த என் பூமியில் இப்படி கொடுமை நடந்தும் தடுக்க இயலா கையறு நிலையில் இருந்ததை எண்ணி மிகவும் வருந்தினேன். இதுவே சீமை-கலப்பின மாடுகளை கொன்றிருந்தால் இந்த அளவு வருத்தம் இருந்திருக்காது.
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி சொன்னபோது சில நண்பர்கள் ஏன் தமிழில் நன்றி சொல்லலாமே என்றனர். தமிழ் தேதியோ-ஆங்கில தேதியோ, கேலண்டர் தேதி கொண்டு பிறந்தநாள் கொண்டாடுவதே சங்க காலத்தில் தமிழ் பேசிய ஐந்து நாடுகளிலும் இல்லாத வழக்கமாகும். பிறந்த மாதத்தில் பிறந்த நட்சத்திரம் வரும் நாளைத்தான் கொண்டாடுவர். பாரம்பரிய முறை இன்னும் பொருத்தமாகவும் இருக்கும். முதலில் அதையே மாற்றி கொள்ள வேண்டும். அதோடு கேக் வெட்டி வெள்ளைக்கார அடிமை என்று நிருபித்து கொண்டு, அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும், அவர்கள் பெற்றோருக்கு பிறந்தநாள் கொண்டாடியாக வேண்டிய கட்டாயத்தையும் திணிக்கும் வழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
மொத்தத்தில் கொஞ்சம் வித்தியாசமான தினம் தான்.

No comments:
Post a Comment