பெற்றோருக்கும் பிள்ளைக்களுக்குமான உறவு, குருவுக்கும் சீடனுக்குமான உறவு, கணவனுக்கும் மனைவிக்கும்னான உறவு, நண்பர்களுக்குள் உள்ள உறவு, அரசனுக்கும் குடிமக்களுக்குமான உறவு, வியாபாரி வாடிக்கையாளருக்குமான உறவு, முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவு - இவை அனைத்துக்கும் நம்பிக்கையே அடிப்படை.. சமூக சங்கிலியில் முக்கியமான கண்ணிகள் இவை.. நம் பாரம்பரிய இந்திய சமூகம் இவை அனைத்தையும் மனித உறவுகள் மட்டுமே என்றுரைக்காமல் அறம் என்னும் கவசம் கொண்டு உறுதியாக்கி வைத்தமையால், சமூகம் ஒழுக்கத்தோடு சீரும் சிறப்புமாக இருந்தது. இன்று வெளிநாட்டு சித்தாந்தங்களும், உலகமயமாக்கலும், அந்நிய மதவாத சக்திகளும் நெருக்கடி கொடுத்து அந்த நம்பிக்கை என்னும் அறத்தை தளர்த்தி இவ்வுறவுகளை தாழ்த்தி, இவை உறவுகள் அல்ல உடன்படிக்கை என்று அழிக்க நினைக்கும் வேளையிலும் இந்த தர்மமே காத்து நிற்கிறது..
தர்மம் தலை காக்கும். யாருக்கு என்ன நல்ல விஷயம் நடந்தாலும், அதை வாழ்த்துங்கள். அதற்கு காரணம் அவர்கள் கடைபிடித்த/செய்த தர்மம்தான் என்பதை அந்த மகிழ்ச்சியான சூழலில் எடுத்துரைத்து-உணரவைத்து ஊக்கப்படுத்துவோம்..

No comments:
Post a Comment