Tuesday, 31 December 2013


கடந்த 2010 ஆண்டு, ஒரு நள்ளிரவில், ஈரோடு நசியனூரை சேர்ந்த விவசாயி ராமசாமி அவர்கள் தோட்டத்தில் அவர் பல வருடம் பாடுபட்டு வளர்த்த சந்தன மரத்தை சமூக விரோதிகள் அறுத்து கொண்டிருந்தார்கள். 

விழித்து கொண்ட அவரை ரம்பத்தால் அறுக்கவும் துணிந்து விட்டனர். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் தற்காப்புக்கு உரிமத்துடன் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்தும் ஆபத்து நீங்கா நிலையில் அந்த சமூக விரோதிகளில் ஒருவனை சுட்டு விட்டார். இந்த சம்பவத்தை சுடபட்டவன் மரண வாக்குமூலத்தில் உறுதி செய்துள்ளான். இருந்தும் திரு ராமசாமி (60) அவர்களை இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு பதிந்து அலைகழித்து வருகிறார்கள்.

இதே போன்றதொரு சம்பவதிற்கு கர்நாடக அரசு அம்மாநில விவசாயிக்கு பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தது. இங்கே?

தன் தற்காப்புக்கு கூட உரிமை துப்பாக்கியை பயன்படுத்த முடியாத போது, எதற்கு இன்னும் உரிமை துப்பாக்கி? இதே திரு ராமசாமியை அவர்கள் கொன்று இருந்தால்..?

என்கவுண்டர் போலிசாருக்கு பதவி உயர்வு அழிக்கும் நம் அரசு இந்த விவசாயியை மட்டும் வஞ்சிப்பதேன்..?? 

இந்த விவசாயிக்கு நீங்கள் ஏதேனும் உதவ விரும்பினால், முதல்வர் தனிப்பிரிவு, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ, சட்டத்துறை அமைச்சர் போன்றோருக்கு மனுவை மின்னஞ்சல் அனுப்பவும்


எது எப்படியோ.. இந்த ஆண்டு இந்தியாவிலேயே மிக குறைந்த காற்று மாசு வெளியிட்ட மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கும்..!

# மின்வெட்டுக்கு நன்றி!

திருச்செங்கோட்டில் நாளை மின்தடை

# இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. என்னமோ 24 மணிநேரமும் கரண்ட் இருக்க மாதிரி!

தாய் மொழி கல்வி


தாய் மொழி கல்வி
------------------------
தமிழக பள்ளிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பெரும்பான்மை கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பாடம் நடத்தபடுகிறது. புரியாதவர்களுக்கு தமிழில் கேள்வி கேட்கவோ-விளக்கம் தரவோ பெரும்பாலும் இடமளிப்பதில்லை. இதனால் பள்ளிகளில் மிகசிறப்பாக கல்வி கற்றவர்கள் கூட கல்லூரிகளில் தோல்வியை தழுவி தாழ்வு மனப்பான்மையால் வாழ்க்கையை இழக்கிறார்கள் (என் கல்லூரி நண்பன் ஞாபகம்). இழப்பு அவர்களுக்குமட்டும் இல்லை பாரத நாட்டுக்கும்தான்.

கற்றுகொடுக்கபடுவது தொழில்நுட்பமா இல்லை மொழியையா என்பது விளங்க வில்லை. எதிர்த்து எந்த மாணவனும் குரல் கொடுப்பதும் இல்லை. 'எனக்கு புரியவில்லை, தமிழில் விளக்குங்கள்' என்று எத்தனை மாணவன் போர்க்கொடி தூக்கியுள்ளான். 'நான் கற்க வந்தது பொறியியல், ஆங்கிலம் அல்ல!ஆங்கிலத்தை திணிக்காதீர்கள்!' என்று கூறும் துணிவு எத்தனை பேருக்கு உள்ளது.சுத்தமாக தமிழிலேயே நடத்தவேண்டும என்று சொல்லவில்லை. அதேசமயம் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவேன் என்று பிடிவாதமும் வேண்டாமே..!

ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட உலகின் தொழில்நுட்ப முன்னோடிகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் தாய் மொழியிலேயே பாடம் நடத்துகிறார்கள். இது மொழி வளர்க்கும் முயற்சி / மொழி வெறி என்பது நிச்சயம் தவறு. 

இதில் அறிவியல் காரணங்களும் மிக முக்கியமாக உள்ளது. ஒவ்வொருவரின் மூளையும் ஆழ்மனதில் தங்கள் தாய் மொழியை கொண்டே இயங்குகிறது. வேற்று மொழியில் கற்றல் பணி நடக்கும்போது மூளையின் ஆற்றல மொழிபெயர்ப்பு வேலைகளில் செலவு செய்யபடுகிறது. கற்பிக்கப்படும் மொழியின் அறிவு குறைவாக உள்ளபோது, நிலைமை இன்னும் மோசமாகி பாடத்தை பின்தொடர முடியா நிலை ஏற்படுகிறது.

தங்கள் தாய்மொழியில் கற்பதால் புரிதலும், நுண்ணறிவும், ஆராய்ந்து உணர்தலும் அதிகமாகிறது. கற்கும் வேளைகளில் மூளையின் செயலாற்றல் நன்கு பயன்படுத்தி கொள்ளபடுகிறது. தாய்மொழியில் கற்பதால் மொழிமாற்ற வேலைகள் மூளைக்கு குறைந்து கற்கும் வேலையை மட்டுமே பார்ப்பதால் மூளையின் ஆற்றல நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளமுடிகிறது.

இதனால் தான் தற்காலங்களில் நம் நாட்டில் முன்னோடிகள், தலைவர்கள், சித்தாந்தவாதிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என எல்லாவற்றிற்கும் அறிவு பஞ்சம் ஏற்படுகிறது. பிற மொழிக்கல்வி கார்பரெட்களுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலேயே முழுமூச்சாக உள்ளன.

இதை அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும் கண்டு கொள்ளாவிட்டாலும் மாணவர்களும் ஆசிரியர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.


சட்ட ரீதியாகவும்-தர்க்க ரீதியாகவும், சமூக-சினிமா-பத்திரிகை களிலும் மாற்றம் வேண்டும். அதுவே டெல்லி உட்பட பெண்கள் மேல் நடந்த கொடுமைக்கும், தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கான உண்மையான தீர்வாக இருக்க முடியும். 

இல்லையேல், இதுவும் அரசியல் விளையாட்டில் மக்கள் கவனம் சிதறடிக்க பயன்பட்ட கருவியாகவும், மீடியாக்களின் செய்தி பசிக்கு கிடைத்த விருந்தாகவும் மட்டுமே கருதமுடியும்!

#வாழ்க பாரதம்! வாழ்க இறையான்மை!

ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம்


சாய பிரச்சனையால் சுகாதாரமான குடிநீர் வழங்க இயலாததால் ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது காவிரியில் - மாநகராட்சி பகுதியில் நீர் எடுக்காமல் சாய விஷம் கலக்கும் முன்னர் பவானி பகுதியில் நீர் எடுத்து சப்ளை செய்வது.

இது தோல்-சாய ஆலைகள சாய விஷத்தை வெளியிடுவதை அரசால் தடுக்க/கட்டுபடுத்த முடியாததை காட்டுகிறது.



இப்போது ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டால், சாய-தோல் ஆலை அதிபர்கள் பிரச்சனையின்றி பெருமளவில் சாய விஷத்தை காவிரியில் கலப்பார்கள். இதனால் மாநகராட்சியின் நிலத்தடி நீரும், ஈரோடு, நாமக்கல உள்ளிட்ட காவிரி பாயும் பிற மாவட்டங்களின் மண், குடிநீர் போன்ற அனைத்தும் சீர்கெட்டு போகும் அபாயம் உள்ளது. 

427 கோடி செலவு செய்து ஊராட்சிகோட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விட, சாய-தோல் ஆலைகளை விஷத்தை வெளியிடாமல் கட்டுபடுத்தினால் ஈரோடு மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களும் நலம் பெறுவார்கள். அரசு நிதியும் மிச்சமாகும்.

இதன் மறைமுக சிக்கலாக ஊர்ராட்சிகோட்டையில் இருந்து ஈரோடு வரை பல லட்சம் லிட்டர் நீரை தினமும் பம்பிங் செய்ய செலவாகும் மின்சாரமும் அதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பும்..!

பொங்கல் விழா!


பொங்கல் விழா! - ஒவ்வொரு அசைவிலும் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றும் விழா. கிராமங்கள் தோறும உள்ளூர் விளையாட்டுகள் விழா நிகழ்ச்சிகள் மற்றும் ஈரோட்டு மஞ்சள், காங்கேயம் காளை, கிராமத்து பானை, மாக்கோலம், கும்மி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா என்று ஒவ்வொரு விசயமும் கலப்படமில்லா பாரம்பரிய வாழ்க்கை முறை.

ஒவ்வொரு நாட்டுக்கும்-இனத்துக்கும் வருடத்தின் விழாகாலம் என்ற ஒன்று உண்டு. அமெரிக்க ஐரோப்பியர்களுக்கு கிறிஸ்துமஸ், சீனர்களுக்கு சீன புத்தாண்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரம்ஜான், இந்தியர்களுக்கு பொதுவாக தீபாவளி போன்று தமிழர்களுக்கு (நமக்கே நமக்கான!) விழா காலம் என்றால் அது பொங்கல் தான். நான்கு நாள் விழா, விவசாயத்தை மையப்படுத்தி கொண்டாடும் உலகின் ஒரே இனம் நம் இனம்-ஒரே விழா பொங்கல் விழா. இது அந்நாளில் சமூகத்தில் உழவர்களே ஆதிக்கம் செலுத்தியதன் அடையாளம்!

அறுவடை முடிந்தபின் தேவையற்றதை முதல் நாள் கழித்துவிட்டு, கடவுளுக்கும்-பூமிக்கும்-நாட்டு மாடுகளுக்கும் நன்றி சொல்லிவிட்டு, பின்னர் நம் உறவுகளை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து அடுத்த வெள்ளாமைக்கான திட்டமிடுதலையும் முடித்து ஒரு வருடத்தின் Reset Point போல இந்த விழா உள்ளது..! 

தமிழர்கள் வாழ்க்கைக்கும், பொருளாதார சுதந்திர-தற்சார்பு நிலைக்கும், பண்பாட்டுக்கும் நீக்க முடியாத காரணிகளாக இருந்தவை பாரம்பரிய விவசாயமும் நாட்டு மாடுகளும் தான் என்பதை நினைவூட்டி சொல்லுவது இதன் சிறப்பு. (அந்த கால தமிழனை சொன்னேன்! இப்போது உள்ள கார்பரேட்களின் செக்குமாடுகளை இல்லை!)

பொங்கல் விழாவிலேயே இன்றைய விவசாய பிரச்சனைகளுக்கான தீர்வு ஒளிந்துள்ளதை உணர வேண்டும். வரும் காலத்தில் இயற்கை வேளாண்மை-நீர் மேலாண்மை-நாட்டு மாடு காத்தல்-பாரம்பரிய விதை காத்தல் போன்ற விசயங்களை மனதில் நிறுத்தி அந்நிய கார்பரேட் 
சூழ்ச்சிகளில் சிக்காமல் இருக்க முயற்சிஎடுப்போம்.



(குறிப்பு: மாடுகள் என்றாலே நாட்டு மாடுகள் தான். இயற்கை வேளாண்மை-சித்த மருத்துவம்-ஆன்மிகம் அனைத்திலும் நாட்டு மாடுகள் மட்டுமே. மாடுகள் போன்று தோற்றமளிக்கும் கலப்பின பன்றிகள் கணக்கில் வராது. அவற்றின் பால் ஒரு ஸ்லோ பாய்சன்-[சர்க்கரை, பாலியல் மற்றும் மரபு பிரச்சனைகளை பதுக்கி வைத்திருக்கும் வெடிகுண்டு], உழவுக்கும் உதவாது-மொத்தத்தில் அவை வெள்ளையன் விட்டு சென்ற நான்கு கால் குட்டி சாத்தான். அதன் பால் தயிர் நெய் போன்றவற்றை அபிஷேகதிற்கோ திருநீறு தயாரிக்கவோ மற்ற எந்த ஆன்மீக விசயங்களுக்கு பயன்படுத்தவே கூடாது.பெரும் பாவம்!)

பொங்கல் கொண்டாட்டத்தை உழவரின் சோகத்தை உதாசீனபடுத்தும் நிகழ்வாக எண்ணாமல், இனி வருங்காலதிர்க்கான புத்துணர்வையும் நம்பிக்கையும் அளிக்கும் விழாவாக நினைப்போம்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்னும் 4000 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரின் ஏருதழுவல் விளையாட்டு வெறும் வீர விளையாட்டாக மட்டும் இல்லாமல் நம் பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள நாட்டுமாடுகளை கொண்டாடி இன விருத்தியும் பொதிகாளைகள் வளர்ப்பு போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய கட்டமைப்பாகும். ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் போன்றவை நாட்டு மாடுகளின் இனங்கள் காக்கப்படவும் அவற்றின் திறன்/செழுமையை கூட்டவும் தூண்டுகோலாக இருந்தன. நாட்டு மாடுகள் இன்றி இயற்கை விவசாயம்/பாரத சுய சார்பு பொருளாதாரம் சாத்தியமில்லை. பாரதத்தை தங்கள் சந்தையாக மாற்ற பல காலமாக நம் நாட்டுமாடுகளை அழிக்க வெளிநாடுகள் பல்வேறு வழிமுறைகளில் சூழ்ச்சிதிட்டங்களை செயல்படுத்தி வந்தன.

People for Ethical Treatment of Animals (PETA) என்னும் பன்னாட்டு மிருகவதை தடுப்பு அமைப்பு, ஜல்லிக்கட்டை தடை செய்ய கடும் பிரயத்தனம் காட்டி வருகிறது. வழக்கு தொடர்ந்து மீடியாக்களிலும் ஜல்லிக்கட்டை தவறாக சித்தரிக்க முயன்று வந்தது. PETA முகத்தில் கரி பூசியது போல, நீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது.

நாட்டுமாடுகளை ஒழித்துவிட்டு பாரதம் விஷ உர/பூச்சி மருந்துக்கும்; கலப்பின மாடுகள் என்னும் பன்றிகளின் பாலை குடித்து சர்க்கரை நோய், மந்தமான தாம்பத்திய வாழ்க்கை, மரபுக்கோளாறு போன்ற குறைகளோடு மருந்துக்கும்-வெளிநாட்டு நிறுவனங்களை அண்டி இருக்க வேண்டும் என்ற எண்ணமே இவர்கள் செயல்பாடுகளின் அடிநாதமாக உணர்கிறேன்.

உலகம் முழுக்க கடைபரப்பி அசைவ உணவு விற்கும் நிறுவனங்களையோ, இன்னும் வெளிநாடுகளில் மிக குரூரமாக மிருக வேட்டையும்/விளையாட்டும் நடப்பதையோ தடுப்பதில் PETA இவ்வளவு தீவிரம் காட்டவில்லை (இருந்தால் சொல்லவும்!). சைவ உணவுக்கு மாற சொல்லி சில அரைநிர்வாண படங்கள் தான் இணையத்தில் கிடைகின்றன. வெளிநாட்டு மாடல்கள் சம்பளம் என்ன என்று தெரியும். PETA விற்கு கொடுக்கப்படும் நிதியுதவி இது போன்ற மூக்கணாங்கயிறு இல்லாத நிர்வாகத்தின் செயல்களால் வீணடிக்கப்படுகிறது. இந்த மாடல்கள் விளம்பரம்தான் மிருகங்களை காக்க போகிறதா..?? PETA வுக்கு நிதியுதவி செய்து ஆதரிப்போர் யோசிக்கவும்.


PETA வின் உண்மை முகம் இன்று தமிழக மக்கள்/மாணவர்கள் மத்தியில் பரவி ஏகோபித்த எதிர்ப்பை PETA எதிர்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. சேவை செய்ய விரும்பவில்லை என்று சொல்லி ஒதுங்கி கொள்பவன் கூட ஒரு ரகம். ஆனால் PETA போன்றோர் தாங்கள் சேவை செய்வதாக சொல்லிக்கொண்டு உபத்திரவம் செய்து, உண்மையில் சேவை செய்வோரின் இடத்தையும் அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.