மனிதனை மனிதனாக பார்க்காதீர்கள்.. மனிதனை ஒரு குடும்பத்தின் உறுப்பினராக, ஒரு கிராமத்தின் உறுப்பினராக பாருங்கள். கிராமங்களும், குடும்பங்களுமே தேசத்தின்-சமூகத்தின் செங்கல்கள்.. தனிமனிதர்கள் அல்ல..
Friday, 25 July 2014
தைராய்ட் கம்ளைன்ட்
போன மாசம் டாக்டர பாத்தப்ப, "உங்களுக்கு தைராய்ட் கம்ளைன்ட் வந்திருச்சு.. இனிமே நீங்க வாழ்க்க முழுக்க தைராய்ட் மாத்தர சாப்படனும்.." னு சொல்லிருக்காரு.. ஆனா, அவர் தந்த தைராய்ட் மாத்தர சாப்படாம நாட்டு மாட்டு அர்க், நாட்டு மாட்டு மோர், சூரிய வெளிச்சம், மலை காய்கறி தவிர்த்து நம்ம நாட்டு காய்கறி னு ஒரு மாசம் கடபிடிச்சு திரும்ப போய் செக் பண்ணுனா உங்களுக்கு சரியா போச்சு னு சொல்றார்..! என்னங்க னு கேட்டா "முன்னலாம் நாலு பாய்ன்ட் இருக்கற வர நார்மல்னு வரையறை சொன்னாங்க; இப்போ ரெண்டுங்கற லிமிட் நார்மல் னு சொல்றாங்க.." னு சொல்றார்..
அதெப்படி, அடிக்கடி நார்மல் விகிதம் மாறுமா..?? இவர் பேச்ச கேட்டு ஹார்மோன் அமைப்பை பாதிக்கற அந்த மாத்திரைய சாப்பிட ஆரம்பிச்சிருந்தா வங்குல சிக்குன எலி மாதிரில மாட்டிருக்கோணும்..? மருத்துவர்கள் மேல உள்ள மரியாதைய குறைக்கறதே இதுபோன்ற சம்பவங்கள்தான். சக்கரய எப்படி பணம்காய்ச்சி வியாதியா காட்டுனாங்கலோ அதுபோலதான் இதுவும்.. பாவம் அந்த டாக்டர் என்ன செய்வாரு, அவருக்கு அப்படி சொல்ல சொல்லி வற்புறுத்தப்படறார். நல்ல வேளை இப்போவாவது சொன்னாரே னு இருந்தது..

கூல்டிரிங்க்ஸ்
பெப்சி, கொக்க கோலா உட்பட இப்போதுள்ள கூல்டிரிங்க்ஸ்.. இதில் கலந்துள்ளவைகளை பாருங்கள்..
கபைன் (போதைப்பொருள்).. (high fructose corn syrup)வெள்ளை சக்கரை (விஷம்).. ஆப்டாய்ட் (ஓபியம் மூலக்கூறு போதைப்பொருள்)... பாஸ்பாறிக் அமிலம்.. கார்பனேட் (எலும்பையே அரிக்கும், உங்கள் வயிறு குடல் சுவர்கள் எம்மாத்திரம்??) கிளிசரின் (உணவு குறித்த உடல் அறிவை குழப்ப..) இதுக்குமேல இதுல இன்னும் என்னென்னவோ கலக்கப்படுது.. படிச்சவங்க, நீங்களே தேடி தேடி படிச்சு புரிஞ்சிக்குங்க..
நாட்டு மாட்டு மோர், இளநீர், பானகம், பனந்தெளுவு, கொத்தமல்லி கருப்பட்டி பானங்கள், பல்வேறு பழச்சாறுகள் போன்ற சுதேசி பானங்கள் எவ்வளவோ உண்டு.. வாய்ப்பிருப்ப்பவர்கள் அதை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

போதைகள்
ஓபியம் - ஹெராயின் - மார்பின் - ஆப்டாய்ட் = சீமை மாட்டு பால் - வெள்ளை சர்க்கரை - சாக்லேட்
ஹார்மோன் சீர்கேடு, புத்தி பேதலிப்பு, சர்க்கரை நோய், இதயக்கோளாறு,ஆட்டிசம், சுவாச கோளாறு, நோய் எதிர்ப்பு பலவீனம்,,,,,,,, (எல்லையற்ற கமாக்கள்)
வெளிநாட்டு மருந்து-மருத்துவ-உர வியாபாரம், இயற்கை சீரழிவு, நீர்வள கேடு, விவசாய சீரழிவு, மனித வளம்-மனித சக்தி இழப்பு, அறிவு இழப்பு, பண்பாட்டு சீரழிவு, பொருளாதார நாசம்,,,,, (எல்லையற்ற கமாக்கள்)

சைவம்-பரம உத்தமம்
சைவம்-பரம உத்தமம்... இருக்கும் உணவு பஞ்சத்திற்கு இருபது கிலோ தானியம் தீவனமா செலவு பண்ணி ஒரு பிளேட் கோழி சாப்பிட வேண்டுமா..? இருபது கிலோ தானியம் எத்தனை பேரின் உணவு; ஒரு பிளேட் சிக்கன் எத்தனை பேரின் உணவு..? அந்த தானியங்கள் போக்குவரத்து, கோழிக்கு செலவாகும் தண்ணீர், அவை வெளியிடும் வெப்பம், கெட்ட வாயுக்கள், கோழிகளை பராமரிக்க தேவையான மின்சாரம் இவையெல்லாம் தனி... அப்படி அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் னு நெனைக்கரவங்க தன் கண் முன்னால பூச்சி புழுவ தின்னு வளர்ற நாட்டு கோழிய விழா காலங்கள் ள மட்டும் சாப்புடுங்க.. அதுதான் நம்ம சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும், மனதுக்கும், உலகத்துக்கும் நல்லது..
Saturday, 21 June 2014
உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்
June 20, 2014
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.
தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த கட்டுரை
Sunday, 8 June 2014
டேட்டா சென்டர்கள்
இயற்கை சீரழிவை தடுக்க குரல்கொடுப்போர் காணாத மிகப்பெரிய ஓட்டை ஒன்று உள்ளது. அந்த ஓட்டை நேரடியாக நம் கண் முன் தெரியாமையால் நமக்கு ஒரு மாயமானாக இருந்து போக்கு காட்டி வருகிறது. அது டேட்டாசென்டர்கள் எனப்படும் தகவல் மையங்கள். நம் இணையத்தில், பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஈமெயில்கள், ஆவணங்கள் அனைத்தும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அந்த நிறுவனத்தின் தகவல் மையத்தில் உள்ள கோடிக்கணக்கான சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கருதி, அதை பிரதி எடுத்து இன்னொரு டேட்டா சென்டரிலும் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல நூறு ஏக்கர பரப்பளவு கொண்ட டேட்டா சென்டர்கள் பல இடங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு டேட்டா சென்டரையும் குளிர்விக்க சிறப்பு வாய்ந்த ஏ.சி மெஷின்கள் வேண்டும். இவற்றை ப்ரெசிஷன் ஏர் கண்டிஷனிங் என்பார்கள். காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக குறுகிய அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும், என்பதற்காக இந்த சிறப்பு மெஷின்கள் பயன்படுகின்றன.
இந்த டேட்டா சென்டர்கள் வருடக்கணக்கில் நிற்காமல் இயங்கும். அதை அந்த ஏசி மிஷின்களும் நிற்காமல் வருடக்கணக்கில் குளிரூட்டும். இவை குளிரூட்ட பல நூறு மெகாவாட் மின்சாரம் சர்வசாதாரணமாக தேவைப்படும். அந்த மின்சாரம் தயாரிக்க பல லட்சம் டன் நிலக்கரி கப்பலில் சுமந்துவரப்பட்டு, எரிக்கப்படும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு டேட்டா சென்டரும் எவ்வளவு மோசமான இயற்கை பேரழிவை உண்டாக்குகின்றன என்பது புலப்படும். தற்போது மீடியாக்கள், சினிமா உட்பட பல்வேறு துறைகள் மூலமாக புகைப்படம்-குறும்படம் எடுக்கும் பழக்கம் நவீனத்துவ அடையாளமாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் பெரிய சூழ்ச்சி இது. ஏனெனில் சாதாரண ஆவணமா, ஈமெயிலோ சிறிய அளவு இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளும். ஒரு டிஜிட்டல் புகைப்படமோ, குறும்படமோ பல நூறு மடங்கு அதிக இடத்தை ஆக்கிரமிக்கும்.
Subscribe to:
Posts (Atom)