Wednesday, 2 April 2014

கற்பழிப்புகளை ஒழிக்க..

கற்பழிப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் முற்போக்குகள், லயோலா கல்லூரி, கம்யுனிஸ்ட்கள், பெண்ணியவாதிகள் மற்றும் இவர்களின் கூட்டணி, சாதி (அ) கட்சிகள் பார்த்தே போராடுவதன் மர்மம புரியவில்லை. நேற்று சேலத்தில் நடந்த கற்பழிப்புக்கு, அப்பெண்ணின் ரத்தம் சொட்டும் கால்களை காட்டி பொங்கியவர்கள், ஏனோ ஆசிட் வீசப்பட்ட வினோதினிக்கோ, காரைக்கால் உட்பட பல மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்திய கற்பழிப்புகளுக்கோ, தூத்துக்குடி மற்றும் தருமபுரி பள்ளிசிறுமி கற்பழிப்புக்கோ, பொங்கவே இல்லை. இவர்கள் பொங்கல் மழுங்களாகத்தான் உள்ளது. அதாவது, இளைஞர்களின் சமூக கொபங்களுக்கு தவறான வடிகாலாக. கற்பழிப்பு குற்றங்களுக்கு மூல காரணமான ஆபாசம் பரப்பும் சினிமா ஊடகங்கள், தவறான உணவு முறைகள், ஒழுக்க கல்வியின்மை, பருவத்தில் திருமணம் செய்யாமை போன்றவற்றை செய்ய சொல்ல மாட்டார்கள்.

முற்போக்குகளே.. இது முற்போக்கு அல்ல.. குறுக்குபோக்கு... இதுக்கு பிற்போக்கு எவ்வளவோ மேல்! முற்போக்கு வழியில் சென்று வாழ்வை இழந்தவர்கள் தான் ஏராளம். பாரம்பரியமே சரியான வாழ்வுக்கு அடித்தளம்.

பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தி

இன்றோடு மூன்றாவது முறையாக நாட்டு பசுவின் பஞ்சகவ்ய மருந்துகளின் சக்தியை உணர்ந்தேன்.

1.பத்து வருடமாக சளித் தொந்தரவுடன் சரியாக தூங்க இயலாமல் சிரமப்பட்ட பெரியவர் ஒரு மண்டலத்தில் பூரண குணமானார்.

2.கர்ப்பப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண் கருத்தரித்தார். 

3. கேன்சர் நோயாளி ஒரே மாதத்தில் ஆச்சர்யமூட்டும் அளவு தேர்ந்து விட்டார். (விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் என்று மருத்துவரே சொல்லிவிட்டார்)

மூவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இவை மட்டுமன்றி, நாட்டு பசுக்களின் பஞ்சகவ்ய மருந்துகள் செய்யும் அற்புதங்கள் ஏராளம். எவ்வித பக்கவிளைவுகளும் அற்றது. நவீன மருத்துவம் சொல்லுவது முக்கால்வாசி பொய்; தருவது முக்கால்வாசி விஷம். நாட்டுபசு உயிர்காக்கும், உணவு தரும், செல்வம் தரும், அன்பு தரும், அனைத்தும் தரும். எனவேதான் அது கோமாதா.

செல்வம் என்பதன் அர்த்தம்

செல்வம் என்பதன் அர்த்தம் தவறாக வரையறுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி தத்துவம் சரியாக விளங்காமை தான் காரணம். இன்று வாழ்க்கை தரம் உயர்வாக இருப்பதாக மாயையில் இருக்கிறோம். உண்மையில், நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக விட்டுச்சென்ற மண்வளம், நீர்வளம், சமூக வளம், கனிம வளம், இயற்கை-கால்நடை என அனைத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விற்று தின்று கொண்டிருக்கிறோம். செல்வம் சேரவில்லை, அழிந்து வருகிறது. நிலையானதும்,விலைமதிப்பற்ற சொத்துக்களையும் விற்று முப்பது வருடம் தாங்காத கட்டிடங்கள், ஆடம்பர திருமணங்கள், முட்டாளாக்கும் கல்வி என வேண்டாததற்கு-நிலையற்றதற்கும் செலவு செய்து வருகிறோம். செல்வம்/லக்ஷ்மி தத்துவம் கொஞ்சம் விளங்கியிருக்கும்.. 
புரிறமாற அப்பறமா சொல்ற..

நாட்டுப்பசு-தேசிய விலங்கு

நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவமும், அவற்றின் இன்றைய நிலை குறித்தும் வலதுசாரி, இடதுசாரி, முற்போக்கு, பிற்போக்கு, குறுக்குபோக்கு என்று எல்லா தரப்பினரும் நன்கு அறிந்துள்ளார்கள்/ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பிறகு என்ன, நாட்டு பசுக்கள் வதையை தடை செய்வதில் என்ன சிக்கல்..? நாட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். நாட்டு பசுக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். இது ஓவர் என்று சொல்வோர், இந்தியா போன்ற நாட்டில் கூட பசுக்களுக்கு தனி அமைச்சகம் இல்லாவிட்டால் வேறு எங்கு நிறுவுவது? பசுக்களில் இருந்து உணவு, மருந்து, உரம், ஊட்டச்சத்து என நம் நாட்டின் இறக்குமதிகளில் பெருமளவு குறைக்கும் சக்தியும், ஏற்றுமதி வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. பசுக்களில் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. பிரத்யேக அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள், கல்லூரிகள் அவசியம் தேவை.

நாட்டு பசுக்களின் பாலுக்கென தனி பிராண்ட்

நாட்டில் முதன்முறையாக குஜராத்தில் நாட்டு பசுக்களின் பாலுக்கென தனி பிராண்டோடு பால் மக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் எப்போது?. சீமை மாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வர்கீஸ் குரியன் வாழ்ந்த பூமியிலேயே இந்த மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆவின், ஹட்சன் போன்ற நிறுவனங்களுக்கு இனியாவது உரைக்குமா பார்ப்போம்..! நாட்டு பசுவின் பாலுக்கு லிட்டர் ரூ.60 கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். தொழில்முனைவோருக்கான போட்டியில்லா சந்தை இது..

(எங்கள் பகுதியில், ஈரோட்டில் தம்பிரான் மெடிக்கல்ஸ் இல் நாட்டு பசுவின் பால் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் பிராட்னு போட்டு விற்பதில்லை)



விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் என்றாலே எல்லா கேள்விகளுக்கும் பதிலுடையவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து, உங்கள் லட்சணம் இதுதான் என்று காட்டிவிட்டது இயற்கை. பறந்துகொண்டிருந்த மலேசிய விமானம் காணோம். இத்தனை நாடுகள், செயற்கைகோள்கள், நீர்மூழ்கி கப்பல்கள், நிபுணர்கள் இருந்தும் அவ்வளவு பேர் பயணம் செய்த ஒரு விமானத்தையே தொலைத்து விட்டார்கள். இத்தனைக்கும் அண்ட் விமானம் நவீன விஞ்ஞானத்தின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாங்கியது.

இவர்களுக்கு நம் பாரம்பரிய அறிவை பற்றி விமர்சிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று. விஞ்ஞானத்தை மட்டுமே அடிப்படையாக ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லும் சித்தாந்தங்கள், பாசி படிந்த பாறையின் மீது நின்று கொண்டிருப்பதை உணரட்டும்.

Tuesday, 1 April 2014

எழுத்தாளர்கள் உண்மை முகம்

ரெமோன் மக்சேசே (ராமன் மகசாசே என்று மீடியாகளில் உச்சரித்துக்காட்டப்படும் சொல்லின் சரியான உச்சரிப்பு; ரெமோன் என்பதற பிலிப்பினோ பெயரை எனது பிலிப்பினோ நண்பர் உறுதிசெய்தது) விருது பெறுவதற்கு முதல் தகுதி நீங்கள் ஒரு தேச துரோகியாக இருக்க வேண்டும் என்று அஜித் வடக்கயில் (Ajit Vadakkayil) சொன்னது முதலில் ஆச்சர்யமளித்தது. அதுவே, கம்யுனிஸ கட்டுரை ஒன்று, போர்டு பவுண்டேசனின் இந்திய தலைமை அதிகாரியாக இருக்கும் கவிதா ராமதாஸ் தான், மக்சேசே விருதின் நிதியாளர்களான ராக்பெல்லர் பவுண்டேசனின் ஆதார சக்தியான ராக்பெல்லர் பிரதர்ஸ் பண்ட் இன் தலைமை உறுப்பினர் என்ற செய்தியும் எதையோ உணர்த்துகிறது. ஆம் ஆத்மியின் முக்கிய தூண்கள் பலரும் தொண்டு நிறுவனங்கள் வைத்துள்ளனர் அவை அனைத்துக்கும் போர்டு பவுண்டேசன் நிதி அளித்துள்ளது. இந்த நிதிப்பரிமாற்றங்கள் குறித்த சரியான விளக்கங்கள் இதுவரை ஆம் ஆத்மி தரப்பில் இல்லை மாறாக மழுப்பல்களே உள்ளன. இந்த லிஸ்ட் ஐ கொஞ்சம் நீட்டினால் நாட்டில் ஒரு எழுத்தாளன், இலக்கியவாதி, பெண்ணியவாதி கூட மிஞ்ச மாட்டார்கள் என்கிறார்கள்! அதே கட்டுரையில் ஜெயமோகனை வாரிவிட, ஜெயமோகன் பதிலுக்கு கம்யுனிஸ்ட் எழுத்தாளர்களை கொஞ்சம் துகிளுரித்தார், சீனா தற்போது கீழ்த்தரமான பெருமுதலாளிகளின் கூடாரம் எனவும் அவர்களின் இந்திய ஆதிக்கத்திற்காக தொழிலாளர்களை பிரித்துகட்டி அவர்கள் வீசும் பருக்கைகளை தின்று வாழும் ஐந்தாம்படை எச்சில்பங்கீட்டாளர்கள் என்று உண்மைகளை பொரிந்து தள்ளியுள்ளார். ஆக, இங்கு எல்லாரும் எதோ ஒரு வகையில் வெளிநாட்டு கூலிகள் தான். இவர்களின் விவாதங்களையும், சிந்தனைகளையும், கட்டுரைகளையும் படிப்பவன், கேட்பவன் பின்பற்றுபவன் எவ்வளவு பெரிய முட்டாள்?